பார்ட்டி குவாசா ரக்யாட்டின் தலைவர் கமரஸாமான் யாகோப் தனது கட்சி தேசிய முன்னணியின் (பிஎன்) நட்பு கட்சியாக இருக்கும் என்று கூறினார்.
இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற கட்சியின் தொடக்க விழாவில், பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப்பின் சகோதரரான இதனைத் தெரிவித்தார்.
“பார்ட்டி குவாசா ரக்யாட், அரசாங்க நட்பு கட்சியாக இருக்க முடிவு செய்துள்ளது. ஏனென்றால், இந்தக் கட்சி அரசாங்கத்துடன் நட்பாக இருந்தால் மட்டுமே நாங்கள் விரும்பும் இலக்கை அடைய முடியும்.
ஏழைகளுக்கு இலவச வீட்டுவசதி அல்லது ஏழைக் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி, தேவையான மக்களுக்கு இலவச சுகாதாரம் பெறுவது போன்றது, இன்றைய அரசாங்கத் தலைமையுடன் நாங்கள் நட்பாக இல்லாவிட்டால் நடக்காது என்றார்.
முன்னாள் கிளாந்தான் பிகேஆர் தலைவர் நிக் அப்துல் அஜீஸ் நிக் ஹாசன், முன்னாள் பாடாங் செராய் எம்.பி. என் கோபாலகிருஷ்ணன், முன்னாள் புத்ரா கட்சியின் நெகிரி செம்பிலான் தலைவர் முகமது நசீர் சலுடின் மற்றும் முன்னாள் அமானா கட்சியின் பஹாங் தலைவர் ஹம்சா ஜாபர் ஆகியோர் உடனிருந்தனர்.
இதற்கிடையில், கட்சியை அமைப்பதற்கு முன்பு தனது தம்பி இஸ்மாயிலின் ஆசீர்வாதத்தை அவர் கேட்கவில்லை என்று கூறினார்.
“இல்லை, யுஎம்-இல் படித்த காலத்தில் இருந்து, இன்று வரை, அரசியல் கட்சிகளில் நான் ஈடுபட்டுள்ள எனது போராட்டத்தைப் பார்த்தால், எனது முடிவு பிரதமரின் சிந்தனையைப் பின்பற்றி இருக்காது.