பிஆர்என் மலாக்கா : பிகேஆர் 4 கூடுதல் இடங்களில் போட்டியிடும்

மலாக்கா மாநிலத் தேர்தலில் (பிஆர்என்) 12 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவதை பிகேஆர் நோக்கமாகக் கொண்டுள்ளது.

14-வது பொதுத் தேர்தலுடன் (ஜிஇ14) ஒப்பிடும்போது, 4 இடங்கள் கூடுதலாக, 12 சட்டமன்றத் தொகுதிகளை பிகேஆர் இலக்கு வைத்துள்ளது என்று அதன் தலைவர் ஹலீம் பாச்சிக் கூறினார்.

“பிகேஆர் ஜிஇ14-இல் போட்டியிட்ட 8 மாநிலத் தொகுதிகளிலும் போட்டியிடும். மேலும், ஜிஇ14-இல் பெர்சத்து போட்டியிட்ட ஆறு மாநிலத் தொகுதிகளிலிருந்து மேலும் நான்கு தொகுதிகளையும் அது சேர்த்து கொள்ளும்.

“இந்தப் பிஆர்என்-இல், எட்டு மாநிலத் தொகுதிகளில் வெற்றி பெற பிகேஆர் இலக்கு கொண்டுள்ளது,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

14-வது ஜிஇ-இல், பிஎச்-உடன் இருந்தபோது பெர்சத்து போட்டியிட்ட ஆறு இடங்கள் ஆயேர் லிமாவ், லெண்டு, அசஹான், பாயா ரும்புட், தெலோக் மாஸ் மற்றும் சுங்கை ரம்பாய் ஆகியவை ஆகும்.

வரவிருக்கும் மலாக்கா பிஆர்என்-இல், பிகேஆரின் இலக்கு குறித்து கருத்து கேட்கப்பட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.