முன்னாள் ஐஜிபி, மத்தியஸ்தம் மூலம் வழக்கைத் தீர்க்க ஒப்புக்கொண்டார் – ஹன்னா இயோ

முன்னாள் தேசியக் காவல்துறைத் தலைவர் மூசா ஹாசனுக்கு எதிராக மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத் துறையின் முன்னாள் துணை அமைச்சர் ஹன்னா இயோ தாக்கல் செய்த அவதூறு வழக்கு மத்தியஸ்தம் மூலம் தீர்க்கப்படும்.

சமீபத்தில், மலேசியாகினி தொடர்பு கொண்டபோது, இரு தரப்பு வழக்கறிஞர்களும், வழக்கை சுமுகமாக தீர்த்துக்கொள்ள இருவரும் ஒப்புக்கொண்டதை உறுதிப்படுத்தினர்.

வாதியாக, இயோ சார்பில் ஆஜரான வழக்கறிஞர், லிம் வெய் ஜியாட் மற்றும் பிரதிவாதியாக, மூசா சார்பில் முகமட் கைருல் அஸாம் அப்துல் அஜீஸ் ஆகியோர் மத்தியஸ்தர்களாக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை உறுதிப்படுத்தினர்.

மலேசியாகினி பார்த்த மத்தியஸ்த ஒப்பந்தத்தின் நகலில், யோ மற்றும் மூசாவின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இயங்கலை காரணப் பட்டியலின்படி, நவம்பர் 29-இல், நீதிபதி குவே சியூ சூன் முன்னிலையில், வழக்கு மேலாண்மைக்காக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மாரா தொழில்நுட்பப் பல்கலைக்கழக (யுஐடிஎம்) ஏற்பாட்டிலான ஒரு கருத்தரங்கில் மூசா பேசியதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு ஜூலை 3-ஆம் தேதி இயோ அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

“1989 ஹட் ஞாய் அமைதி ஒப்பந்தத்தின் போதான பிரச்சினைகள் பற்றிய சொற்பொழிவு : சிபிஎம் சரணடைந்தனர்?” என்ற தலைப்பில், யுஐதிஎம் மலாய் ஆட்சியாளர்கள் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கம் ஒன்றில் அந்த உரை நிகழ்த்தப்பட்டது.

கடந்த ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி, பேசிய அந்த உரை தொடர்பாக மூசாவிடம் போலீசார் விசாரணை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

மூசா உள்ளிட்டோர் தங்களது உரையில், மே 13 கலவரத்தின் பின்னணியில் மலாய்க்காரர்களின் பங்கு குறித்து டிஏபி ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளது என்றனர்.

மலேசியாகினி பார்த்த வழக்கு அறிக்கையின் நகலின் படி, அந்த உரையில் “முற்றிலும் உண்மைக்குப் புறம்பான, இழிவுபடுத்தும், தொந்தரவான, பொய்யான, தவறான மற்றும் அடிப்படையற்ற” அவதூறான அறிக்கைகள் இருப்பதாக இயோ கூறினார்.