சூப்பர்மெக்ஸ் மீதான அமெரிக்கத் தடைகளை மற்ற துறைகள் கவனிக்க வேண்டும்

உள்ளூர் கையுறை தயாரிப்பாளரான சூப்பர்மெக்ஸ் கார்ப்பரேஷன் பெர்ஹாட்-இன் (Supermax Corporation Bhd) துணை நிறுவனத்தில், அமெரிக்கச் சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு (சிபிபி) நிறுவனத்தின் சமீபத்திய கட்டுப்பாடுகள், தொழில்துறை மற்றும் பிற துறைகளில் உள்ள முதலாளிகளின் கவனத்தில் இருக்க வேண்டும் என்று பினாங்கு, மலேசியத் தொழிற்சங்க காங்கிரஸ் (MTUC) தெரிவித்துள்ளது.

பினாங்கு எம்.டி.யு.சி செயலர் கே வீரியா, சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் (ஐஎல்ஓ) கட்டாயத் தொழிலாளர் குறிகாட்டிகளுக்கு இணங்கவில்லை என்று சந்தேகிக்கப்படும் மலேசிய நிறுவனங்கள் மீது சிபிபி கடந்த காலங்களில் தடுப்புக்காவல் விடுவிப்பு ஆணையை (WRO) விதித்துள்ளது என ஓர் அறிக்கையில் கூறியுள்ளார்.

“அத்துமீறல்கள் இருந்தபோதிலும், உற்பத்தி, தோட்டங்கள் மற்றும் பிற முக்கிய வேலைத் துறைகளில் கட்டாய உழைப்பின் குறிகாட்டிகள் தெளிவாக அடையாளம் காணப்பட்டுள்ளன, இது சேவைகள், விருந்தோம்பல், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் போன்ற பொருளாதார நடவடிக்கைகளில் இருக்காது.

பினாங்கு எம்.டி.யு.சி செயலர் கே வீரியா

“வெளிநாட்டுத் தொழிலாளர்கள், பொருளாதார நடவடிக்கைகளின் இத்தகைய பகுதிகளில், கட்டாய உழைப்பின் குறிகாட்டிகளிலிருந்து அவர்கள் பாதுகாக்கப்படுகிறார்களா, இன்னும் கவனமாக ஆய்வு செய்ய வேண்டும்,” என்று வீரியா கூறினார்.

கடந்த 15 மாதங்களில் இத்தகைய தடையை எதிர்கொண்ட நான்காவது மலேசிய நிறுவனமாக சூப்பர்மெக்ஸ் கோர்ப் உள்ளது.

செப்டம்பரில், சூப்பர்மெக்ஸ் துணை நிறுவனமான, மெக்ஸ்டர் கையுறை தயாரிப்பு நிறுவனம் (Maxter Glove Manufacturing Sdn Bhd), தனது வெளிநாட்டு ஊழியர்களின் சம்பளத்தைச் சட்டவிரோதமாகக் குறைத்த குற்றச்சாட்டையும், மோசமான வாழ்க்கை நிலைமைகளின் குற்றச்சாட்டுகளையும் எதிர்கொண்டதாக மலேசியாகினி செய்திகள் வெளியிட்டது.

அந்த நேரத்தில், குற்றச்சாட்டுகளை மறுத்த மெக்ஸ்டர் கையுறை, ஊழியர்கள் தங்கள் குறைகளைச் சமர்ப்பிப்பதற்கான நடைமுறைகள் இருப்பதாகக் கூறினார்.

வெளிநாட்டு தொழிலாளர்களின் நுழைவை மீண்டும் திறக்குமாறு முதலாளிகளிடம் இருந்து கோரிக்கைகள் அதிகரித்து வருவதால், ஐஎல்ஓ கட்டாயத் தொழிலாளர் குறிகாட்டிகளுக்கு இணங்குவதை நோக்கமாகக் கொண்டு, ஒரு விரிவான வெளிநாட்டு தொழிலாளர் வேலைவாய்ப்பு கொள்கையை அரசாங்கம் செயல்படுத்துவது முக்கியம் என்று வீரையா கூறினார்.

“வெளிநாட்டுத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்புக் கொள்கையின் விரிவான மறுசீரமைப்பு இயற்றப்படாவிட்டால், அதிக நிறுவனங்கள் மற்றும் தொழில்கள் வெளிநாட்டு தொழிலாளர்கள் இறக்குமதிக்குத் தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பது எங்கள் கருத்து.

“எனவே, பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தின் போது தொடங்கப்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்கள் பிரச்சினையில் சுயாதீன குழு சமர்ப்பித்த பரிந்துரைகளைப் பரிசீலிக்குமாறு நாங்கள் அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்,” என்று அவர் கூறினார்.