மலாக்காவில் பாஸ்-உடன் ஒத்துழைக்க அம்னோ விருப்பம்

மலாக்கா மாநிலத் தேர்தலில் (பிஆர்என்) முவாஃபாகாட் நேஷனல் (எம்என்) மூலம், பாஸ்-உடனான தனது ஒத்துழைப்பைத் தொடர அம்னோ முடிவு செய்தது.

நேற்று இரவு நடைபெற்ற அம்னோ உச்சமன்றக் கூட்டத்தில் (எம்.என்.) இந்த முடிவு எட்டப்பட்டதாக அம்னோ பொதுச்செயலாளர் அஹ்மட் மஸ்லான் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், ஒருவருக்கொருவர் மோதுவதைத் தவிர்க்க, பாஸ் தனது சொந்த சின்னத்தைப் பயன்படுத்தி போட்டியிட வேண்டும் என்ற கோட்பாட்டின் மூலம் ஒத்துழைப்பு வழிநடத்தப்பட்டது என்று அவர் கூறினார்.

“மலாக்கா பிஆர்என்-ஐ எதிர்கொள்வதில் எம்.தி.-ஐ வலுப்படுத்தும் அம்னோ பொதுச் சபை 2020-இன் தீர்மானத்தின்படி, பாஸ் கட்சியுடனான புரிதலைத் தொடரக் கூட்டம் முடிவு செய்தது.

அஹ்மட் மஸ்லான் கூறினார், அம்னோ தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி, அவரது துணை, முகமட் ஹசன் மற்றும் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் ஆகியோரிடம் மலாக்கா பிஆர்என் பற்றிய எந்த முடிவையும் இறுதி செய்ய அனுமதிக்குமாறும் எம்தி அம்னோ ஆணையிட்டது.

அக்டோபர் 26 அன்று, தேசியக் கூட்டணி (தே.கூ.) தலைவர் முஹைதின் யாசின், பெர்சத்து, பாஸ் மற்றும் கெராக்கான் ஆகியவை தே.கூ. சின்னத்தைப் பயன்படுத்தி மலாக்கா பிஆர்என் -இல் போட்டியிட ஒப்புக்கொண்டதாகக் கூறினார்.

எனினும், பாஸ் மத்தியச் செயற்குழு உறுப்பினர் முகமட் ஜூடி மர்சுக்கி, உறுப்புக் கட்சிகள் தே.கூ. சின்னத்தைப் பயன்படுத்துவதற்கான முடிவை முதலில் பாஸ்-இல் உள்ள வார்ப்பு அமைப்புக்கும் அந்தந்தக் கட்சிகளிடமும் கலந்தாலோசிக்க வேண்டும் என்றார்.

நேற்று, அஹ்மட் ஜாஹிட், மலாக்கா பிஆர்என்-க்கான தேசிய முன்னணி தேர்தல் இயந்திரத்தை அறிமுகப்படுத்திய போது, மலாக்காவில் ​​அம்னோ பெர்சத்துவுடன் ஒத்துழைக்காது என்று வலியுறுத்தினார்.

பெர்சத்துவுடன் ஒத்துழைக்காதது அவரது தனிப்பட்ட நிலைப்பாடு அல்ல, மாறாக அது அம்னோ அடித்தட்டு மக்களின் முடிவு என்று அஹ்மட் ஜாஹிட் விளக்கினார்.