பட்ஜெட் 2022 | கிரேட் 56 மற்றும் அதற்குக் கீழ் உள்ள அரசு ஊழியர்களுக்கு RM700 மதிப்புள்ள சிறப்பு நிதி உதவி வழங்கப்படும்.
இது அரசு ஊழியர்களின் சேவை மற்றும் அர்ப்பணிப்பைப் பாராட்டுவதற்காக என்று நிதி அமைச்சர் தெங்கு ஜஃப்ருல் அப்துல் அஜீஸ் கூறினார்.
RM350 மதிப்புள்ள சிறப்பு நிதி உதவி அரசு ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்கப்படும் என்றும் ஜஃப்ருல் தெரிவித்தார்.
“இந்தச் சவாலான காலகட்டத்தில், மக்களுக்குச் சேவைகளை வழங்குவதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டுள்ள அரசு ஊழியர்களின் சேவைகள் மற்றும் தியாகங்களைப் பாராட்டுவதற்காக, 1.3 மில்லியன் அரசு ஊழியர்களுக்கு – தரம் 56 மற்றும் அதற்கும் குறைவானவர்கள் – RM700-உம், ஒரு மில்லியன் அரசாங்க ஓய்வு பெற்றவர்களுக்கு RM350-உம் சிறப்பு நிதி உதவியாக வழங்க, RM1.3 பில்லியன் நிதி ஒதுக்கீட்டை அரசாங்கம் அறிவிக்கிறது.
நேற்று நாடாளுமன்றத்தில், 2022-ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பித்து உரையாற்றிய அவர், “அரசு ஊழியர்கள் தொடர்ந்து முழு அர்ப்பணிப்புடன் சேவையாற்றுவதற்கு இந்த உதவி ஊக்கியாக அமையும் என நம்பப்படுகிறது என்றார்.