கோவிட்-19 காரணமாக, சரவாக் துணை முதல்வர் ஜேம்ஸ் ஜெமுட் மாசிங் இன்று காலை காலமானார்.
இன்று காலை 7 மணியளவில், மாசிங் இறந்துவிட்டதாக போர்னியோ போஸ்ட் தெரிவித்துள்ளது.
செப்டம்பர் 28-ம் தேதி, மாசிங், சரவாக் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிரச் சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றார்.
அன்றைய தினம், தான் வகை 3 கோவிட் -19 நோயாளி என்று, மாசிங் முகநூலில் பதிவு செய்தார்.
தடுப்பூசியை முடித்துவிட்டதாகவும், பொதுமக்களை அவ்வாறு செய்ய ஊக்குவித்ததாகவும் மாசிங் கூறினார்.
அஸ்ட்ரோ அவானி அறிக்கையின்படி, மாசிங் கடந்த வாரம் நோர்மா கூச்சிங் மெடிக்கல் செண்டருக்கு மாற்றப்பட்டார்.
மாசிங், 72, ஒரு மூத்தச் சரவாக் அரசியல்வாதி ஆவார். அவர் 1983 முதல் எட்டு முறை பாலே சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.
2004-இல், பார்ட்டி ரக்யாட் சரவாக்கை நிறுவுவதற்கு முன்பு, அவர் பார்ட்டி பன்ஸா டாயாக் சரவாக்குடன் தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
மாசிங், சரவாக் அமைச்சரவையில் உறுப்பினராகவும் இருமுறை துணை முதல்வராகவும் பதவி வகித்துள்ளார்.