இன்று முதல், பள்ளி நிர்வாகம் ஆசிரியர்களின் தடுப்பூசி சான்றிதழ்களைச் சரிபார்க்க அனுமதிக்கப்படுகிறது என்று மூத்தக் கல்வி அமைச்சர் டாக்டர் ராட்ஸி ஜிடின் கூறினார்.
அரசு ஊழியர்களுக்குத் தடுப்பூசி போடுவதைக் கட்டாயமாக்கி, பொதுப்பணித்துறை (ஜேபிஏ) வெளியிட்ட சுற்றறிக்கையை எந்த ஆசிரியரும் கடைபிடிக்கத் தவறிவிடக்கூடாது என்பதற்காகவே இது என்று அவர் கூறினார்.
“இன்று முதல், ஆசிரியர்கள் எந்த அளவிற்குச் சரியாக இருக்கிறார்கள் என்பதை அறிய (தடுப்பூசி எடுத்துக்கொள்வது) பள்ளி நிர்வாகம் டிஜிட்டல் தடுப்பூசி சான்றிதழைச் சரிபார்க்கும்.
“ஏனென்றால் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று கூறி, தடுப்பூசி போடப்படாத சில வழக்குகள் இருப்பதை நாங்கள் விரும்பவில்லை.
“எனவே, நவம்பர் 1-ம் தேதி கிடைக்கும் சமீபத்திய தரவு துல்லியமான தரவு என்பதை உறுதிசெய்ய, ஒவ்வொரு ஆசிரியரும் தங்கள் தடுப்பூசி சான்றிதழைப் பள்ளியால் சரிபார்க்கப்படுவதை நாங்கள் உறுதிசெய்வோம், மேலும் ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டால், துல்லியமான தரவுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று, இன்று மலாக்காவில், செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
ஜேபிஏ-இன் முந்தைய சுற்றறிக்கையில், ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் தடுப்பூசியை எடுக்க வேண்டும் என்றும், நவம்பர் 1-ஆம் தேதிக்கு முன்னர் தடுப்பூசிகளை உடனடியாக முடிக்க வேண்டும் என்றும், இல்லையெனில் அவர்கள் பணிநீக்கம் உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கைகளையும் எதிர்கொள்ள நேரிடும் என்றும் கூறப்பட்டது.
நாடு இன்னும் கோவிட்-19 அச்சுறுத்தலை எதிர்கொண்டிருக்கும் நிலையில், ஆசிரியர்கள் கல்வி அமைச்சுடன் இணைந்து, பள்ளி மாணவர்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்க முடியும் என்பதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று ராட்ஸி கூறினார்.
இன்று மலாக்கா, சிலாங்கூர், கோலாலம்பூர் மற்றும் புத்ராஜெயாவை உள்ளடக்கிய தேசிய மீட்புத் திட்டத்தின் (பிபிஎன்) நான்காவது கட்டத்திற்கு மாறிய மாநிலங்களில், 694,531 ஆண்டு ஒன்று, இரண்டு மற்றும் மூன்று மாணவர்களும், 652,142 படிவம் மூன்று மற்றும் நான்கு மாணவர்களும் மாநிலத்தில் பள்ளிப்படிப்பைத் தொடங்கினர் என்று ராட்ஸி கூறினார்.
- பெர்னாமா