மலாக்கா மாநிலத் தேர்தலில் (பிஆர்என்), தேசிய முன்னணி (பிஎன்) அதிகமான புதிய முகங்களைக் களமிறக்கவுள்ளது.
மாநிலச் சட்டப் பேரவையின் பதவியில் இருந்த 13 பேரில், நால்வர் மட்டுமே மீண்டும் வேட்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர், 28 வேட்பாளர்களில் ஐந்து பேர் பெண்கள்.
2018-வது பொதுத் தேர்தலில் (ஜிஇ), 18 வேட்பாளர்களை நிறுத்திய அம்னோ, பிஆர்என்-இல் போட்டியிட 20 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
மசீச ஏழு வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது, 2018 ஜிஇ-ஐ விட ஒன்று குறைவு; அதே நேரத்தில் மஇகா முன்பு போலவே, ஒருவரை நிறுத்தியது. மஇகா சார்பில் நடராஜா செல்லப்பா வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
முன்பு கெராக்கானுக்கு ஒதுக்கப்பட்ட பெங்காலான் பத்து மாநில இருக்கை தற்போது அம்னோவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மசீச டுயோங் மாநில இருக்கையையும் அம்னோவிடம் ஒப்படைக்கும்.
2018 ஜிஇ-இல் தோல்வியடைந்த மூன்று வேட்பாளர்களான லிம் பான் ஹோங் (கெலேபாங்), கோ சின் ஹான் (பெம்பான்) மற்றும் அப்துல் ரசாக் அப்துல் ரஹ்மான் (தெலோக் மாஸ்) ஆகியோரை பிஎன் மீண்டும் நிறுத்தியுள்ளது.