நவம்பர் 4 முதல் 27 வரையில், மலாக்கா மாநிலத்தில் அனைத்து அதிகாரப்பூர்வ அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி இல்லை.
மலாக்கா மாநிலப் பாதுகாப்பு மன்றம் (எம்கேஎன்), நேற்று புதுப்பிக்கப்பட்ட தேசிய மீட்பு திட்ட (பிபிஎன்) எஸ்ஓபி-இன் நான்காம் கட்ட அறிக்கையின் மூலம், மலாக்கா மாநிலத் தேர்தல் (மலாக்கா பிஆர்என்) தொடர்பான அனைத்து நடவடிக்கைகள் அல்லது சமூக நிகழ்வுகள், தேர்தல் இயந்திர வெளியீட்டு விழா உட்பட அனைத்தும் அக்டோபர் 25 முதல் நவம்பர் 27 வரை அனுமதிக்கப்படவில்லை.
மேலும், சமூக இடைவெளி மற்றும் சுகாதார தலைமை இயக்குநரின் அறிவுறுத்தல்களுக்கு இணங்குவதைச் சிக்கலாக்கும் வகையில், பொதுமக்களின் பிரசன்னத்தை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு நடவடிக்கையும் அனுமதிக்கப்படாது.
எவ்வாறாயினும், மலாக்காவில், 50 விழுக்காடு இடத் திறனுக்கு உட்பட்டு, சமூக இடைவெளி இணக்கத்துடன், முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்ட நபர்களுக்குக் கட்சிக் கூட்டங்கள் அனுமதிக்கப்படுகின்றன.
எம்கேஎன் கூற்றுபடி, கட்சிக் கூட்டங்களுக்குப் பிறகான பத்திரிகையாளர் சந்திப்புகள் சமூக இடைவெளியுடன், முகக்கவரி அணிந்துகொண்டு நடத்த அனுமதிக்கப்படுகின்றன.
- பெர்னாமா
மலாக்கா பரிட்ச்சை மாண்புமிகுகளை திருத்துமா?
வேட்பாளன் பணத்துக்கும் பதவிக்கும் தவளைப்போல் தாவினால் பால் கொடுக்கும் வாக்காளன் ஆடுபோல் தாண்டி கடிக்கணும்
என் இனிய தனிமை, நிம்மதி எல்லாம் கெட்டுப்போச்சி ! ஏன்?
கட்சிகளின் மும்முனைகள், நான்கு முச்சந்தி,மேலும் சுயேட்சைகள் மக்களை விழிக்கச்செய்யுமா?
பாசின் பல கட்சி தாவல்கள் பாசம் தொடர்ந்து பலிக்குமா?
நான்கு இந்திய/ தமிழர்களின் இலக்கு நோக்கி ஜெயிக்குமா?
இப்படி இன்று நடைபெறும் மலாக்கா தேர்தல் வேட்பு மனு பற்றி இன்னும் பல குத்தல், குடைச்சலான கேள்விகள் தூண்டில் சிக்கிய புழுவாய் புடைக்கிறது.
எந்த சுறாமீன் வாயில் வாக்காளர்கள் மீண்டும் சிக்கப்போகிறார்கள் என்றும் யாருக்குமே தெரியாது ?
காரணம், ஒரு மணி நேரத்துக்கு ஒரு நிலையில் நம் வாக்காளர்கள் வயிற்றில் திரவியம் ஊற்றி கூண்டு தாவும் காக்காக்களாக பண அரசியல் கட்சி ஆண்டான்கள் ஆடுகிறார்கள்.
வாக்காளர்களுக்குசனநாயக பூச்சூடி மாண்புமிகுகள் தாவும் வேதாந்தம் பாடி கட்சிக்குள் கட்சி பதவி, பாசம் பேசி பசப்புகிறார்கள். நாட்டுக்கும், மக்களுக்கும், மாநிலத்துக்கும் சேவை செய்ய சட்ட மன்றத்துக்கு நாங்கள் தெருத்தெருவா சண்டைப் போட்டு சட்டமன்றத்துக்கு அனுப்பி வைப்போம். இவர்கள் கால் மேல கால் போட்டு ஒரு நாளுக்கு ஒரு சப்பாத்து போட்டு ஆற்றில் அரசியால் சாக்கடையை கலக்கிறார்கள்.
வாக்காளர்களுக்கு கண்ணைக்கட்டிவிட்டு அவையை கலைக்க கண்ணாம்பூச்சி, மின்மினி ஆட்டம் ஆடும் ஆக்ஷ்தேலிய கருப்பாடுகளில் தாடிய சரிச்சிவிடவும்.இம்முறை மக்களுக்கு உழைக்கும் பால் கொடுக்கும் கம்பத்து ஆடுகளுக்கு ஓட்டுப்போட வேண்டுகிறோம்.
வெற்றிப்பெற்ற இடத்தில் வேலை செய்து ,வாக்குக்கு ஊக்கம் தரும் உண்மை, உழைப்பு, உபாதைகள் இல்லா வட்டார வேட்பாளர்களை தேர்வு செய்யுங்கள்.
இம்போட் – எக்க்ஷ்போட் வாங்கி விற்ற சரக்கு அரசியல் வாதிகளை விட இந்த முறை உங்கள் கம்பத்து சுயேட்சைக்கு ஓட்டுப்போடுங்கள். ஒருவர் சொன்னார் மலாக்காவில் பல்லின மாற்று அரசுக்கு வித்திடுவோம் என்று. பிறகு கட்சிக்குப் போய் கொண்டிசன் போட்டு ஒழுங்கா வேலை செய்யட்டும்.
சொந்தக் கட்சிக்காரன் கட்சி தலைவனுக்கே ஆப்பு அடிக்கறான். நீங்கள்தான் சரியான கொடை இல்லாத ஆணி அடிக்க வேண்டும். ஆணி அடிப்பதும் புடுங்குவதும் உங்கள் கடமையாக கொள்ளுங்கள். மாநில அளவிலான கட்சிகள் தேர்வுக்குப்பின் தாவ முடியாத சட்டம் வந்தால் வாக்காளர்கள் தப்பிப்போம். இல்லையேல் நாமும் தாவுவோம்.
கட்சிகளின் சட்டம், வேட்பாளர்கள் தனி கொள்கைகள் சட்டமாகாது என்ற தலை விதியை மாற்றி, மக்கள் “சேவை எனும் சட்டம் ” அமைக்க நல்ல சட்டாம்பிள்ளைகளை தேர்வு செய்வோம்.
நமக்கு எம் பி பி எக்ஷ் வசூல் ராஜாக்கள் வேண்டாம்.எல் எல் பிகள் சட்டக்காவலர்கள் வேண்டாம். மலாக்காவிற்கு நேர்மையான “ஆடுன்கள்” தூண்கள் தேர்வுக்கு தேடுவோம்.
வேட்பாளன் பணத்துக்கும் பதவிக்கும் தவளைப்போல் தாவினால் பால் கொடுக்கும் வாக்காளன் ஆடுபோல் தாண்டி கடிக்கணும்.
பொன் ரங்கன். பி. ஜே. கே.
தலைவர். மலேசிய நாம் தமிழர் இயக்கம்.
8/11/2021