மலாக்கா பிஆர்என் : அனைத்து அரசு, தனியார் நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி இல்லை

நவம்பர் 4 முதல் 27 வரையில், மலாக்கா மாநிலத்தில் அனைத்து அதிகாரப்பூர்வ அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி இல்லை.

மலாக்கா மாநிலப் பாதுகாப்பு மன்றம் (எம்கேஎன்), நேற்று புதுப்பிக்கப்பட்ட தேசிய மீட்பு திட்ட (பிபிஎன்) எஸ்ஓபி-இன் நான்காம் கட்ட அறிக்கையின் மூலம், மலாக்கா மாநிலத் தேர்தல் (மலாக்கா பிஆர்என்) தொடர்பான அனைத்து நடவடிக்கைகள் அல்லது சமூக நிகழ்வுகள், தேர்தல் இயந்திர வெளியீட்டு விழா உட்பட  அனைத்தும் அக்டோபர் 25 முதல் நவம்பர் 27 வரை அனுமதிக்கப்படவில்லை.

மேலும், சமூக இடைவெளி மற்றும் சுகாதார தலைமை இயக்குநரின் அறிவுறுத்தல்களுக்கு இணங்குவதைச் சிக்கலாக்கும் வகையில், பொதுமக்களின் பிரசன்னத்தை ஏற்படுத்தக்கூடிய எந்தவொரு நடவடிக்கையும் அனுமதிக்கப்படாது.

எவ்வாறாயினும், மலாக்காவில், 50 விழுக்காடு இடத் திறனுக்கு உட்பட்டு, சமூக இடைவெளி இணக்கத்துடன், முழுமையாகத் தடுப்பூசி போடப்பட்ட நபர்களுக்குக் கட்சிக் கூட்டங்கள் அனுமதிக்கப்படுகின்றன.

எம்கேஎன் கூற்றுபடி, கட்சிக் கூட்டங்களுக்குப் பிறகான பத்திரிகையாளர் சந்திப்புகள் சமூக இடைவெளியுடன், முகக்கவரி அணிந்துகொண்டு நடத்த அனுமதிக்கப்படுகின்றன.

  • பெர்னாமா