நாகேந்திரனுக்குக் கோவிட்-19 தொற்று, மரண தண்டனை இடைநிறுத்தம் தொடரும்

மலேசியரான நாகேந்திரன் கே தர்மலிங்கத்திற்கு, கோவிட்-19 தொற்றுக்குச் சாதகமாக சோதனை முடிவு வந்ததை அடுத்து, சிங்கப்பூர் மேல்முறையீட்டு நீதிமன்றம் அவருக்கு விதித்த மரணதண்டனை தடையை நீட்டித்துள்ளது.

மலேசியாவில் உள்ள நாகேந்திரனின் வழக்கறிஞர் என் சுரேந்திரனைத் தொடர்பு கொண்டபோது, ​​நாளை தனது கட்சிக்காரருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படாது என்பதை உறுதி செய்தார்.

“அவர் கோவிட்-19 தொற்றுக்குச் சாதகமாக இருப்பதால், எல்லாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

இன்று பிற்பகல் 2.30 மணிக்குத் திட்டமிடப்பட்ட மேல்முறையீட்டு விசாரணையைத் தொடர்ந்து, சுரேந்திரன் கீச்சகத்தில் இந்த விஷயத்தை முன்னதாக அறிவித்தார்.

நேற்று, நாகேந்திரனுக்கு உயர்நீதிமன்றம் விதித்த தடையை (தண்டனை), இன்று பிற்பகல் மேன்முறையீட்டு நீதிமன்றம் நீட்டித்தது.

“அவர் கோவிட் -19 தொற்றுக்கு நேர்மறையானவர் எனும் காரணத்தால்,” என்று அவர் கூறினார்.