28,800 அரசு ஊழியர்கள் தடுப்பூசி போட மறுப்பு – காரணக் கடிதம் கொடுக்க வேண்டும்

கோவிட்-19 தடுப்பூசியை முடிக்காத சுமார் 28,800 அரசு ஊழியர்களுக்கு, அரசு காரணம் கோரும் கடிதங்களை வழங்கும்.

நவம்பர் 1 -ஆம் தேதிக்கு முன்னதா, அரசு ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமெனப் பொதுச் சேவைத் துறை சுற்றறிக்கையை வெளியிட்டதைத் தொடர்ந்து, பிரதமர் துறை அமைச்சர் (சிறப்புப் பணிகள்) டாக்டர் அப்துல் லத்தீஃப் அகமது இன்று மக்களவையில் அந்தப் புள்ளிவிவரத்தை வெளிப்படுத்தினார்.

“1.6 மில்லியன் அரசு ஊழியர்களில், தடுப்பூசி போட மறுத்தவர்கள் அல்லது இன்னும் தடுப்பூசி போடாதவர்கள் 1.8 விழுக்காட்டினர்.

இன்று நடைபெற்ற கேள்வி பதில் அமர்வில், “இது 10 -ம் நாளாகியும், அமல்படுத்தப்பட்டு 10 நாட்களாகியும், இதுவரை அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்கள் 21 நாட்களுக்குள் காரணம் கோரும் கடிதத்திற்குப் பதிலளிக்க வேண்டும் என்றார்.

கொடுக்கப்பட்ட பதில்கள் திருப்திகரமாக இல்லாவிட்டால், அவர்கள் உள்ளக விசாரணைக் குழு மற்றும் ஒழுக்காற்றுக் குழுவுக்கு அனுப்பப்படுவார்கள் என்று அப்துல் லத்தீஃப் தெரிவித்தார்.

எச்சரிப்பது, பதவி உயர்வு வழங்காமல் இருப்பது மற்றும் சம்பளத்தை நிறுத்தி வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் அவர்கள் மீது எடுக்கப்படலாம் என்று லத்தீஃப் கூறினார்.