எஸ்.ஆர்.சி. இன்டர்நேஷனல் சென். பெர்ஹாட் நிறுவனத்திடம் இருந்து RM16 மில்லியன் முறைகேடாகப் பெறப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக, அம்னோவுக்கு எதிரான சிவில் வழக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட உள்ளது.
அந்த அரசியல் கட்சியின், முன்னாள் 1எம்டிபி துணை நிறுவனம் தொடுத்த வழக்கை இரத்து செய்வதற்கான விண்ணப்பத்தை, நீதிபதி கியுவேய் சியூ சூன் இன்று நிராகரித்ததைத் தொடர்ந்து அந்த முடிவு பின்பற்றப்படுகிறது.
இந்த முடிவை, எஸ்.ஆர்.சி. இன்டர்நேஷனல் வழக்கறிஞர் ரோஸ்லி டஹ்லான் தொடர்பு கொண்டபோது உறுதிப்படுத்தினார்.
கடந்த மே மாதம், எஸ்.ஆர்.சி. இன்டர்நேஷனல் அதன் புதிய நிர்வாகத்தின் கீழ், அதன் பல துணை நிறுவனங்களான கண்டிங்கான் மெந்தாரி சென். பெர். மற்றும் ஜெண்டேலா பிங்கிரான் சென். பெர். ஆகியவற்றுடன் சேர்ந்து வழக்கைத் தாக்கல் செய்தது.
அந்தப் பணம் எஸ்ஆர்சி இன்டர்நேஷனலுக்குச் சொந்தமானது என்பது அரசியல் கட்சிக்குத் தெரியும் என்றும், அம்னோவுக்கு நிதியைப் பெற எந்த அடிப்படையும் இல்லை என்றும் வாதி கூறினார்.
மே 10 அன்று, 1எம்டிபி மற்றும் அதன் துணை நிறுவனமான எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் சென். பெர்., RM96.6 பில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துக்களை மீட்பதற்காக 22 வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளது என்றும், இதில் பல்வேறு உள்ளூர் தரப்பினரிடமிருந்து பெற வேண்டிய RM300 மில்லியனும் அடங்கும் என்று நிதி அமைச்சு உறுதிபடுத்தியது.
மே 7-ஆம் தேது, 1எம்டிபி 6 சம்மன்களும், எஸ்ஆர்சி 16 சம்மன்களையும் தாக்கல் செய்ததாக அமைச்சு கூறியது.
இரண்டு வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் மற்றும் 25 தனிநபர்கள் உட்பட ஒன்பது நிறுவனங்களுக்கு எதிராக 1எம்டிபி -ஆல் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது, அதே நேரத்தில் எஸ்ஆர்சி எட்டு நிறுவனங்கள் மற்றும் 15 தனிநபர்களுக்கு எதிராக பல்வேறு தவறான நடத்தைகளுக்காக வழக்குப் பதிவு செய்துள்ளது.