எண் கணிப்பு துறையால் நடத்தப்படும் “சிறப்பு குலுக்கல்களில்” இருந்து கிடைக்கும் வரி வசூல் சமீபத்திய ஆண்டுகளில் குறைந்து வருகிறது.
சிரம்பான் எம்பி லோக் சியூ ஃபூக்கிற்கு, நிதி அமைச்சு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலின்படி, “சிறப்பு குலுக்கலில்” வசூலிக்கப்படும் வரி அளவு பின்வருமாறு :
• 2019 : RM 113.29 மில்லியன்
• 2020 : RM 72.53 மில்லியன்
• 2021 (செப்டம்பர் வரை) : RM 36.88 மில்லியன்
2021 -ஆம் ஆண்டுக்கான செப்டம்பர் மாத வசூல், முந்தைய ஆண்டின் வசூலில் பாதியாக குறைந்து உள்ளது.
நிதி அமைச்சால் இயக்கப்படும் சிறப்பு வள அறக்கட்டளை கணக்கிற்கு வருமானம் அனுப்பப்பட்டதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
நிதி அமைச்சின் பதில் குறித்து கருத்து தெரிவித்த லோக், பணம் எவ்வாறு செலவிடப்பட்டது என்பதில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று முகநூலில் பதிவிட்டுள்ளார்.
கணிப்பு எண்கள் தொழில், ஒரு வாரத்திற்கு மூன்று “வழக்கமான குலுக்கல்களுக்கு” பந்தயம் வைக்க அனுமதிக்கப்படுகிறது.
‘நிபா வைரஸ்’ பாதிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டுவதற்காக, 1999 -ஆம் ஆண்டு தேசிய முன்னணி நிர்வாகத்தின் கீழ் “சிறப்பு குலுக்கல்” அறிமுகப்படுத்தப்பட்டது.
2018 -இல், 22 “சிறப்பு குலுக்கல்கள்” குறிப்பிட்ட செவ்வாய்க் கிழமைகளில் நடைபெற்றன.
பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம், 2019 -இல் 11 முறை என்றும், 2020 -இல் எட்டு முறை என்றும் “சிறப்பு குலுக்கல்களின்” அதிர்வெண்ணைக் குறைத்தது.
முஹைதீன் யாசின் நிர்வாகத்தின் கீழ், “சிறப்பு குலுக்கல்களின்” எண்ணிக்கை 22 -ஆக உயர்த்தப்பட்டது.
“சிறப்பு குலுக்கல்களை” இரத்து செய்ய, பாஸ் புத்ராஜெயாவை வலியுறுத்தியுள்ளது.
கணிப்பு எண் நடத்துநர்களிடமிருந்து வசூலீக்கப்படும் வரி மிகப்பெரியது.
2008 மற்றும் 2012 -க்கு இடையில், ஸ்போட்ஸ் டோட்டோ மலேசியா சென். பெர்ஹாட், மெக்னம் காப்பரேஷன் சென் பெர்ஹாட் மற்றும் பான் மலேசியன் பூல்ஸ் சென். பெர்ஹாட் ஆகியவற்றிலிருந்து புத்ராஜெயா RM6.3 பில்லியனை வசூலித்தது.
மொத்தத்தில் ஆறு நடத்துநர்கள் உள்ளனர்.