மாச்சாப் ஜெயாவில் ஜினி லிம்’மை பிகேஆர் விலக்கியது – அஸ்மின் கவலை

மலாக்கா பிஆர்என் | மாச்சாப் ஜெயா சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக, பிகேஆர் ஜினி லிம்’மை நியமிக்காதது குறித்து அஸ்மின் அலி கவலை தெரிவித்தார்.

இன்று மாச்சாப் ஜெயாவிற்கு வருகை தந்த அஸ்மின், லிம்மை நீக்கிய பிகேஆரின் முடிவு வருத்தமளிப்பதாகவும், அவர் தனது போராட்டத்தைத் தொடர்வார் என நம்புவதாகவும் கூறினார்.

“இந்த மாநிலத் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து அவர் கைவிடப்பட்டது எனக்கு மிகவும் வருத்தமாக உள்ளது, மேலும் ஜினி லிம் எனக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறி, பிகேஆரில் எழுந்துள்ள உள் பிரச்சனைகளால் ஜினி லிம் பாதிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிகிறது,” என்று அஸ்மின் கூறினார்.

அஸ்மின் பெர்சத்துவில் இணைவதற்கு முன்பு, பிகேஆரின் துணைத் தலைவராக இருந்தார்.

இருப்பினும், லிம் அஸ்மினின் அடிச்சுவடுகளைப் பின்பற்றவில்லை. எவ்வாறாயினும், அவர் முன்பு மத்தியத் தலைமையுடன் மோதலில் ஈடுபட்டுள்ளார்; இதில் மலாக்கா பிகேஆர் தலைவர் ஹலீம் பாச்சிக் செனட்டராக நியமிக்கப்படுவதைத் தடுப்பது உட்பட.

அஸ்மின் பிகேஆரைச் சாடினார், இது லிம்முக்கு நியாயமில்லை என்று கூறினார்.

கெஅடிலான் (பிகேஆர்) நடத்தும் முதிர்ச்சியற்ற அரசியலே, இன்று தேசிய அரசியலில் கெஅடிலனைப் பொருத்தமற்றதாகச் செய்கிறது.

“கெஅடிலான் தலைவர், தனது சொந்த தலைவர்களிடமே நியாயமாக இருக்க முடியாத போது, இந்தக் கட்சி மக்களுக்கும் வாக்காளர்களுக்கும் எப்படி நியாயமாக இருக்கும்.

மாச்சாப் ஜெயாவில், சுமார் 30 கிராமவாசிகளுடன் பேசியப் பிறகு அஸ்மின் செய்தியாளர்களிடம் பேசினார். மாநிலத் தொகுதிக்கான தேசியக் கூட்டணி வேட்பாளரான தை சியோங் ஜியுல் அவருடன் இருந்தார்.

பிஎச் வேட்பாளராக, லாவ் பிங் ஹாவ்-ஐ பிகேஆர் நியமித்துள்ளது.

2008 பொதுத் தேர்தலில் இருந்து மாநிலத் தொகுதியில் இடம்பிடித்து வரும் லிம்மை நீக்குவதற்கான பிகேஆர் தலைமையின் முடிவுக்குச் சில அடிமட்ட உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

பிகேஆர் அடுத்த தேர்தலில் அதன் வாய்ப்புகளைப் பாதிக்காத வகையில் அமைதியின்மையைப் போக்க முயன்றது.

லிம் அந்த முடிவை ஏற்றுக்கொண்டதாகவும், பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமுடன் மாச்சாப் ஜெயாவில் பிரச்சாரம் செய்ததாகவும் முன்பு கூறினார்.