ஜேபிஎம்-க்கு எதிராக பிளவு வாக்களிக்குமாறு குவான் எங் பிஎச்-ஐ வலியுறுத்தினார்

பல பிரச்சனைகள் தொடர்பில், பிரதமர் துறைக்கு (ஜேபிஎம்) எதிராக பிளவு வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று லிம் குவான் எங் பிஎச் எம்பிக்களை வலியுறுத்தினார்.

அவர் எழுப்பிய பிரச்சினைகளில், முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு 100 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான சொத்துக்களை வழங்கியது, கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவேக இரயில் (எச்எஸ்ஆர்) திட்டத்தைத் தொடர வேண்டாம் என்ற ஜேபிஎம்-இன் முடிவு மற்றும் 2022 -ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு ஆகியவை நியாயமற்றவை மற்றும் போதாது எனபனவும் அடங்கும்.

“மலாக்கா மாநிலத் தேர்தலில் (பிஆர்என்), வாக்குப்பதிவு உணர்வைப் பாதிக்காத வகையில் அரசியல் நோக்கங்களுக்காக நஜிப் தனது விண்ணப்பத்தைத் திரும்பப் பெற்றிருந்தாலும், பின்னர் அவர் மீண்டும் விண்ணப்பிக்க மாட்டார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

“100 மில்லியன் ரிங்கிட் சொத்துக்காக நஜிப் இதற்குப் பிறகு மீண்டும் விண்ணப்பிக்க முடிவு செய்தாலும் செய்யாவிட்டாலும், ஒப்புதலை வழங்கிய அமைச்சரவையின்  அசல் முடிவு தவறானது, அது மாற்றப்பட வேண்டியது,” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.

அதிகார அத்துமீறல், நம்பிக்கை மீறல் குற்றம் மற்றும் பணமோசடி போன்றவற்றில் நஜிப் தண்டிக்கப்பட்ட போதிலும், இதுபோன்று ஒப்பந்தம் செய்யப்பட்டதால், லிம் இந்த முடிவை “தெளிவானத் தவறு” என்றும், மேலும் இது பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பின் அரசாங்கத்திற்கு எதிராக பொதுமக்களின் சீற்றத்தை ஏற்படுத்தும் என்றும் லிம் விவரித்தார்.

நஜிப்புக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 210 மில்லியன் ரிங்கிட் தண்டமும் விதிக்கப்பட்டதை நினைவுறுத்திய லிம், இதனால் இஸ்மாயில் கொண்டு வந்த மலேசியக் குடும்பத்தின் கருத்து “கேலி” கூத்தானது என்றார். ஏனெனில், அது மக்களோடு ஒப்பிடும்போது “அரசியல் குடும்பத்திற்கு நெருக்கமானவர்களுக்கு” மட்டுமே பயனளிக்கிறது.

நஜிப்புக்கு 100 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான நிலத்தையும் வீட்டையும் வழங்க அரசாங்கம் கொள்கையளவில் ஒப்புக்கொண்டதைப் பிரதமர் துறை அமைச்சர் (சட்டம் மற்றும் நாடாளுமன்றம்) வான் ஜுனைடி துவாங்கு ஜாபர் நேற்று உறுதிப்படுத்தினார்.

சட்டத்தின் கீழ், நஜிப்பின் உரிமை என்ற அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், ஆனால் இன்னும் கூடுதலான பரிசீலனைக்கு உட்பட்டது என்றும் அவர் கூறினார்.

இந்தப் பிரச்சினை, அரசாங்கத்துடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய பிஎச் தலைவர்களைத் தூண்டியது.

பதிவுக்காக, நஜிப் நேற்று தனது விண்ணப்பத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டார், தற்போது கடினமான காலக்கட்டத்தை எதிர்கொண்டுள்ள மக்களின் நிலைமையைக் கணக்கில் எடுத்துக் கொண்டதாக அவர் காரணம் கூறியுள்ளார்.

பட்ஜெட் ஒதுக்கீடு நியாயமற்றது மற்றும் போதுமானதாக இல்லை என்று அவர் கூறியதில், லிம் 2022 பட்ஜெட் “இனம், மதம் மற்றும் மக்களின் பின்னணியைப் பொருட்படுத்தாமல், குறிப்பாக சபா, சரவாக் மற்றும் அனைத்து குடிமக்களுக்கும்” தேவையின் அடிப்படையில் ஒதுக்கீட்டை விநியோகிக்கத் தவறிவிட்டது என்று கருதுகிறார்.

“2022 -ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்திற்குக் கூடுதலாக RM332 பில்லியனை ஒதுக்குவது விவேகமான கடன் அல்லது பற்றாக்குறையின் அளவைப் பாதிக்காது, ஆனால் மக்களின் உயிர்கள் மற்றும் வாழ்வாதாரங்களைக் காப்பாற்றுவதில் முக்கியமானதாக அது இருக்கலாம்,” என்று அவர் மேலும் கூறினார்.

அதுமட்டுமின்றி, கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவேக இரயில் (எச்.எஸ்.ஆர்.) திட்டத்தைத் தொடர மறுக்கும் ஜே.பி.எம். -இன் முடிவை எதிர்த்து வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் லிம் அழைப்பு விடுத்தார்.

அதற்குப் பதிலாக, தற்போதைய அரசாங்கம் எச்.எஸ்.ஆர். -ஐ, ஜொகூர் பாருவில் நிறுத்தி கோலாலம்பூர்-ஜோகூர் பாரு எச்.எஸ்.ஆர். -ஆக மீட்டமைக்க மட்டுமே அனுமதிக்கும் என்று லிம் கூறினார்.