‘வாக்காளர்கள் வாக்களிக்கச் செல்வதை உறுதி செய்வதே பிஎச்-க்குப் பெரிய சவாலானது’

வரவிருக்கும் 15-வது பொதுத் தேர்தலில் (ஜிஇ), வெளியே சென்று வாக்களிக்க வாக்காளர்களை எப்படி ஊக்குவிப்பது என்று பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) சிந்திக்க வேண்டும் என்று டிஏபி தேசிய அமைப்புச் செயலாளர் அந்தோனி லோக் கூறினார்.

கடந்த ஜிஇ-ல் வாக்களிக்கச் சென்ற வாக்காளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் முயற்சியை எதிர்கொள்ள வேண்டிய ஒரு பெரிய சவால் பிஎச்-க்கு இருக்கும் என்று அவர் கூறினார்.

“இது டிஏபி மற்றும் பிஎச் நிலைகளில் நாம் கவனம் செலுத்த வேண்டிய ஒன்று – கடந்த ஜிஇ-இல் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வந்தவர்களுக்கு, அடுத்த ஜிஇ-ல் மீண்டும் வாக்களிக்க வர எப்படி நம்பிக்கை கொடுப்பது? இது ஒரு பெரிய சவால்.

“ஜிஇ 2018 -உடன் ஒப்பிடும்போது, இந்த முறை வாக்குகளின் விழுக்காடு வெகுவாகக் குறைந்துள்ளது என்பதை நாங்கள் காண்கிறோம், மேலும் 2018 -இல் நாங்கள் வென்ற பல இடங்களைப் பாதுகாக்க முடியாத காரணிகளில் இதுவும் ஒன்றாகும்,” என்று அவர் மலாக்காவில் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

வாக்காளர்களின் உணர்வை மீட்டெடுப்பது, குறிப்பாக ‘வேலியின் மேல்’ உள்ள வாக்காளர்களுக்கு, அவர்கள் வாக்களிக்க வேண்டியது மிகவும் முக்கியமானது என்பதை நிரூபிக்க பிஎச் முயற்சிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

முன்னதாக, அதிகாரப்பூர்வ முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பு, நேற்று மலாக்கா மாநிலத் தேர்தலில் (பிஆர்என்-இல்) பிஎச்-இன் சாதகமற்ற செயல்பாடு குறித்து லோக் கருத்து தெரிவித்தார்.

பிஆர்என்-இல், தேகூ கடந்த பொதுத் தேர்தலில் வென்ற 13 இடங்களுடன் ஒப்பிடுகையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற முடிந்தது.

வருங்காலத்தில் கிராமப்புற வாக்காளர்கள் சரியான மற்றும் துல்லியமான தகவல்களை அணுகுவதற்கான வழியைப் பிஎச் கண்டுபிடிக்கும் என்று அமானா தலைவர் முகமது சாபு கூறினார்.

“இந்த நிலைமை மற்றும் தகவல் அமைப்பு, குறிப்பாக கிராமப்புறங்களில் அதை எவ்வாறு செய்வது என்பதை நாங்கள் ஆராய்ந்து பார்ப்போம், எதிர்ப்பை நாங்கள் அறிவோம்.

“இருப்பினும், நாங்கள் கணக்கெடுப்பு நடத்துவோம், இன்று (நேற்று) வெற்றி பெற்றவர்களை நாங்கள் வாழ்த்துகிறோம்,” என்றார் அவர்.

இதற்கிடையில், மலாக்கா அமானா தலைவர் அட்லி ஜஹாரி, பிஆர்என் முடிவு குறித்த மீளாய்வைத் தனது கட்சி நடத்தும் என்றார்.

“அதே நேரத்தில், எடுக்கப்பட்ட முடிவிற்கு மலாக்கா மக்கள் அனைவருக்கும் நன்றி கூறுகிறோம்.

“இது மாநில அளவிலான மக்களின் அபிலாஷைகளின் ஒரு பகுதியாகும் என்று நான் நம்புகிறேன், மேலும் நாங்கள் செயல்படுத்திய மற்றும் நடைமுறைப்படுத்திய விஷயங்களை நாங்கள் மீளாய்வு செய்து பார்ப்போம்.

“அதே நேரத்தில், மேம்படுத்தக்கூடிய அனைத்து விஷயங்களையும் மேம்படுத்த நாங்கள் முயற்சிப்போம்,” என்று அவர் கூறினார்.