மலாக்கா முதல்வராக சுலைமான் பதவியேற்றார்

லெண்டு மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் சுலைமான் எம்.டி. அலி மலாக்காவின் 13-வது முதலமைச்சராக, இன்று அதிகாலை, யாங் டிபெர்த்துவா நெகிரி மலாக்காவின் அலுவலகத்தில் பதவியேற்றார்.

ஶ்ரீ உத்தாமா சபையில், யாங் டிபெர்த்துவா நெகிரி மலாக்கா துன் முகமட் அலி ருஸ்தாமின் முன்னிலையில் நியமனம் மற்றும் பதவிப் பிரமாணம், விசுவாசம் மற்றும் இரகசியப் பிரமாணம் எடுத்துக் கொள்ளும் விழா நடைபெற்றது.

முகமட் அலியின் மனைவி தோ புவான் அஸ்மா அப்துல் இரஹ்மான், பிரதமரும் அம்னோ துணைத் தலைவருமான இஸ்மாயில் சப்ரி யாகோப், அம்னோ தலைவர் டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி, மசீச தலைவர் வீ கா சியோங் மற்றும் தேசிய முன்னணி ஆலோசனைக் குழுத் தலைவர் நஜிப் துன் ரசாக் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

55 வயதான சுலைமான், தேமு மலாக்கா மாநிலத் தேர்தலில் (பிஆர்என்) வெற்றி பெற்றால், மலாக்கா முதல்வர் வேட்பாளராக முன்னர் பெயரிடப்பட்டார்.

கடந்த ஆண்டு முதல்வராக பதவியேற்ற சுலைமான், மலாக்கா முதல்வராக பதவியேற்றது இது இரண்டாவது முறையாகும்.

  • பெர்னாமா