பிகேஆரின் 24 மணி நேர நோட்டிஸை பிலுட் சட்டமன்ற உறுப்பினர் புறக்கணித்தார்.

மலாக்கா மாநிலத் தேர்தலில் (பிஆர்என்) பக்காத்தான் ஹராப்பான் மோசமாக தோல்வியுற்றதால், எதிர்க்கட்சித் தலைவர் இராஜினாமா செய்ய வேண்டும் என்று டிஏபியைச் சேர்ந்த பிலுட் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்தியதைத் தொடர்ந்து, அதன் தலைவர் அன்வார் இப்ராகிமைக் காக்க மேலும் சில பிகேஆர் தலைவர்கள் முன் வந்தனர்.

இன்று, பகாங் பிகேஆர் மாநிலத் தலைமைக் குழுவின் (எம்பிஎன்) தலைவர் ஃபுசியா சாலே லீ சின் சென்னை விமர்சித்தார்.

பகாங் டிஏபி தலைவர், அன்வாருக்கு எதிரான தனது அறிக்கையைத் திரும்பப் பெற 24 மணிநேர நோட்டீஸ் கொடுக்கப்பட்ட போதிலும், அவர் அதைத் தொடர்ந்து மறுத்து வருவதாக கூறினார்.

“பிலுட் சட்டமன்ற உறுப்பினர் தனது அறிக்கையைத் திரும்பப் பெற 24 மணிநேர நோட்டீஸ் கொடுத்தோம். ஆனால் அவர் மறுத்துவிட்டார்,” என்று ஃபுசியா மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

ஃபுசியாவின் கூற்றுப்படி, லீயின் அறிக்கை நாகரீகமற்றது, திமிர்பிடித்தது, ஆழமற்றது மற்றும் பகாங் சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற அவரது நிலைப்பாட்டை அது பிரதிபலிக்கவில்லை.

“பிலூட் சட்டமன்ற உறுப்பினரின் முன்கூட்டிய அறிக்கைக்குப் பதிலளிப்பதில் பகாங் பிகேஆர் எம்பிஎன் ஆர்வம் காட்டவில்லை, ஏனெனில் இது அவரது அரசியல் சிந்தனையின் அளவை எடுத்துக்காட்டுகிறது, இது பகாங் சட்டமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு நிகரானச் செயல் இல்லை.

“அன்வார் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை இராஜினாமா செய்யவில்லை என்றால், டிஏபி தலைமை பிஎச்-ஐ விட்டு விலக வேண்டும் என்று அவர் மிரட்டுவது ஒரு நாகரீகமற்ற செயல் மற்றும் போர்ட்டிக்சன் எம்பியை எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்க ஒப்புக்கொண்ட பிஎச்-இல் உள்ள கூட்டாளிகளுக்கு முற்றிலும் அவமரியாதை.

“அன்வாரின் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் பிஎச் -இன் தலைவர் பதவியை தீர்மானிக்க, பிஎச் தலைமை மன்றத்திற்கு மட்டுமே உரிமை உண்டு, வேறு எந்தத் தரப்பினரோ அல்லது சட்டமன்ற உறுப்பினர்களோ அல்ல,” என்று அந்தக் குவாந்தான் எம்.பி. கூறினார்.

அன்வார் இராஜினாமா செய்யவில்லை என்றால், டிஏபியை விட்டு விலகுவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார், எதிர்க்கட்சிகள் தங்கள் கூட்டணியை மலாய் அரசியல் கட்சிகளுடன் ஒப்பிடக்கூடாது, இது மலாக்கா பிஆர்என் தோல்வியைப் போன்றதை மீண்டும் ஏற்படுத்தும்.

முன்னதாக, அந்த அறிக்கையைத் தொடர்ந்து, அன்வாருக்குப் பதிலாக ஒரு தலைவரைப் பெயரிடுமாறு அந்த டிஏபி சட்டமன்ற உறுப்பினருக்குப் பிகேஆர் இளைஞரணி உதவித் தலைவர் எஸ் திபன் சவால் விடுத்தார்.

பிகேஆர் இளைஞரணி செயலாளர் சுக்ரி ரசாப் லீயின் கருத்துக்கள் டிஏபியின் நிலைப்பாட்டைப் பிரதிபலிக்காத தனிப்பட்ட கருத்துக்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார், இருப்பினும் டிஏபியின் அரசியல் கல்வி இயக்குநர் லியூ சின் தோங்கும் இதே உணர்வை வெளிப்படுத்தினார் என்று அவர் குறிப்பிட்டார்.

பேராக் பிகேஆர் தலைவர் ஃபர்ஹாஷ் வாஃபா சால்வடோரும் அன்வாரை ஆதரித்து, கடந்த சனிக்கிழமை மலாக்காவில் ஏற்பட்ட தோல்வியை ஒரு தனிநபர் மட்டும் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று கூறினார்.

மலாக்கா பிஆர்என்னில் தேசிய முன்னணி 21 இடங்களைக் கைப்பற்றி மகத்தான வெற்றியை அடைந்தது, மேலும் மாநில அளவில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெற்றது. பிஎச் ஐந்து இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது, அதே நேரத்தில் பிகேஆர் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்தது.

பகாங் டிஏபி செயலாளருமான லீ, பிஆர்என்-இல், பிகேஆர் மற்றும் அமானா டிக்கெட்டுகளின் கீழ், பிஎச்-இன் வேட்பாளராக ‘தவளைகள்’ போட்டியிட அனுமதிக்கும் நடவடிக்கையை வாக்காளர்களைக் கேலி செய்வதாக விமர்சித்தார், அதே நேரத்தில் பிஎச் கட்சி தாவலுக்கு எதிராக சட்டங்களை இயற்றுவதாக உறுதியளித்துள்ளது.

மேலும் கருத்து தெரிவித்த ஃபுசியா, மலாக்கா தோல்விக்கு அன்வாரைக் குற்றம் சாட்ட விரும்பாத டிஏபி ஆலோசகர் லிம் கிட் சியாங் மற்றும் செப்பாங் எம்பியான அமானா ஹனிபா மைடின் போன்ற சில பிஎச் நண்பர்களின் நிலைப்பாட்டிற்கு ஏற்ப, பகாங் பிகேஆர் அன்வாரை எதிர்க்கட்சித் தலைவராக நீடிக்க ஆதரிக்கிறது என்றார்.