தாயிப்-பையும் அவரது குடும்பத்தையும் யாரும் தொட முடியாது

“நாட்டிலிருந்து திருடுவது குற்றம் எனக் கருதும் ஒருவரை நடப்பு அரசாங்கத்தில் காண்பது மிக மிகச் சிரமம். காரணம் எல்லோரும் அதனைச் செய்து கொண்டிருக்கின்றனர்.”

தாயிப்பையும் அவரது 13 குடும்ப உறுப்பினர்களையும் கைது செய்யுங்கள் 

முட்டாள் ஆட்சி: சரவாக் முதலமைச்சர் அப்துல் தாயிப் மாஹ்முட்-டையும் அவரது குடும்பத்தினர்/சேவகர்கள் ஆகியோரை நீதிக்கு முன்பு நிறுத்தும் துணிச்சலோ உறுதியோ நஜிப் அரசுக்கு இருப்பதாக நான் எண்ணவில்லை. ஊழல் குறிப்பாக சரவாக்கில் பெரிய அளவில் தலைவிரித்தாடுவது அவர்களுக்கு நன்கு தெரியும்.

சரவாக் மக்களுக்காக நான் வருந்துகிறேன். அவர்களுக்கு அநியாயம் இழைக்கப்படுகிறது. சரவாக் மக்களுடைய வளப்பத்தையும் செல்வத்தையும் கொள்ளையடிக்கச் சதி செய்கின்றவர்களை விரட்டும் நேரம் வந்து விட்டது.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம், போலீஸ் ஆகியவை மீது எனக்கு நம்பிக்கை இல்லை. இதுதான் இன்றைய மலேசியாவின் வருத்தமளிக்கும் சூழ்நிலை.

ஜேபிமனிதன்: பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் இக்கட்டான சூழ்நிலையில் வைக்கப்பட்டுள்ளார். ஊழலை ஒழித்து பிஎன் -னை உருமாற்றம் செய்வதற்கு அவர் உறுதி பூண்டுள்ளாரா என்பதை அவரது நடவடிக்கைகள் நமக்கு உணர்த்தி விடும்.

அவர் நடவடிக்கை எடுக்கத் தவறினால் மலேசிய வாக்காளர்கள் வாக்குப் பெட்டியைப் பயன்படுத்தி ஊழலைச் சகித்துக் கொள்ள மாட்டோம் என்பதைக் காட்ட வேண்டும்.

அவர் நடவடிக்கை எடுத்தால் பிஎன் -னுக்கு ஆதரவாக வாக்குகளை குறிப்பாக சரவாக்கில் பெற முடியும்.

ஒரு மூளை அணு: பிஎன் -னின் “ரந்தர வைப்புத் தொகை” பிரதிநிதிகளான தாயிப் மாஹ்முட்-டும் மூசா அமானும்  “தொட முடியாதவர்கள்”. காரணம் அவர்கள் போனால் எல்லா அம்னோ/பிஎன் சேவகர்களும் போக வேண்டும்.

ஜெஸ்ஸே: பிரதமருக்கோ அல்லது அவரது சேவகர்களுக்கோ நடவடிக்கை எடுப்பதற்குத் தார்மீக அதிகாரம் கிடையாது. ஏனெனில் அவர்களுடைய கரங்களும் கறை படிந்தவையே.

ஒருவர் விழுந்தால் மற்றவர்களும் சரிய வேண்டியிருக்கும். கடந்த 40 ஆண்டுகளாக கொள்ளையடித்து வரும் பெரிய முதலை சரவாக்கில் காணப்படுகிறது.

ஸ்விபெண்டர்: முதலில் தாயிப்புக்கும் அவரது குடும்பத்துக்கும் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களை முடக்குவதற்கு அந்நிய அரசாங்கங்களைக் கேட்டுக் கொள்வோம். அவரைக் கைது செய்ய மலேசியாவில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது.

கீ துவான் சாய்: நிச்சயமாக எதுவும் செய்யப்பட மாட்டாது. மலேசிய அரசாங்கத்தின் நிலைத் தன்மையைச் சீர்குலைக்கும் முயற்சி அதுவாகும். அவற்றுக்கு ஏன் நமது அரசாங்கம் செவி சாய்க்க வேண்டும்?

சட்டத்துறைத் தலைவர் அலுவலகம் அதனைக் கண்டு கொள்ளாது. ஊழல் தடுப்பு ஆணையம் அதனை புலனாய்வு செய்வதாக அறிவிக்கும். ஆனால் இறுதியில் கையை விரித்து விடும்.

அது தேர்தல் தந்திரம் என பிஎன் அரசியல்வாதிகள் கூறுவர். முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் ஏற்கனவே அதனைச் சொல்லி விட்டார்.

ஆகவே வேறு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படும் என நாம் எதிர்பார்ப்பது நப்பாசையாகும்.

கொம்பாஸ்: அனைத்துலக அரசு சாரா அமைப்புக்கள் நம்மைக் கேலி செய்வதாக நான் நினைக்கிறேன். நாட்டிலிருந்து திருடுவது குற்றம் எனக் கருதும் ஒருவரை நடப்பு அரசாங்கத்தில் காண்பது மிக மிகச் சிரமம். காரணம் எல்லோரும் அதனைச் செய்து கொண்டிருக்கின்றனர்.

TAGS: