மலேசியாவில் ஓமிக்ரான்

மலேசியாவில், கோவிட்-19 ஓமிக்ரான் மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

நவம்பர் 19-ஆம் தேதி, நாட்டிற்குள் நுழைந்த வெளிநாட்டு மாணவர்களின் மாதிரியின் அடிப்படையில் இது நேற்று உறுதி செய்யப்பட்டது.

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த மாணவர் ஒருவர், தற்போது கிள்ளான் பள்ளத்தாக்கிலிருந்து ஈப்போவுக்குச் செல்லும் பேருந்தில் ஐந்து பயணிகளுடன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

சமீபத்தில், ஒரு செய்தியாளர் கூட்டத்தில், சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின், உலகச் சுகாதார அமைப்பு (WHO) ஓமிக்ரானை ஒரு கவலைக்குரிய மாறுபாடாக அறிவிக்கும் முன், அம்மாணவர் நவம்பர் 26 அன்று மலேசியாவிற்குள் நுழைந்தார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, மலேசியா எல்லைக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கியுள்ளது என்று கைரி கூறினார்.