மலேசியாவுக்கான இந்தோனேசியத் தூதர் ஹெர்மோனோ, கோவிட் -19 காரணமாக ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அதிக இறப்பு விகிதம் காரணமாக மலேசியாவிற்குள் நுழைவதற்கான தற்காலிக முடக்கத்தை நாடு நீட்டித்துள்ளது என்றார்.
கோவிட்-19 பாதிப்புகள் குறைக்கப்பட்டு, இந்தோனேசியத் தொழிலாளர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும்போது முடக்கம் நீக்கப்படும் என்றார்.
தொற்றுநோய் காரணமாக, கடந்த ஆண்டு நாடு தனது எல்லைகளை மூடியபோது, மலேசியாவிற்கான இந்தோனேசியத் தொழிலாளர்களின் தற்காலிக முடக்கத்தை இந்தோனேசிய மனிதவள அமைச்சு ஆரம்பத்தில் அறிவித்தது.
இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில், மலேசியாவில் கோவிட்-19 காரணமாக நேர்வுகளும் இறப்புகளும் கடுமையாக அதிகரித்திருந்தாலும், இந்தோனேசியர்களிடையே இறப்பு எண்ணிக்கை மிகவும் ஆபத்தான எண்ணிக்கையில் உயர்ந்துள்ளது என்று ஹெர்மோனோ மலேசியாகினியிடம் கூறினார்.
“ஜூலையில் 408 இறப்புகளும், ஆகஸ்ட் மாதத்தில் 700 இறப்புகளும் ஏற்பட்டுள்ளன, அவர்களில் பெரும்பாலோர் அரசு மருத்துவமனைகளுக்குச் செல்ல மிகவும் பயந்ததால், அவர்கள் வீடுகளிலேயே இறந்தனர்,” என்று அவர் ஒரு சிறப்பு பேட்டியில் கூறினார்.
கைது செய்யப்படுதல், நாடு கடத்தப்படுதல் அல்லது நாட்டில் தங்களுடைய இருப்பிடத்தை வெளிப்படுத்திவிடுதல் போன்ற கவலைகள் தொழிலாளர்களிடையே இருப்பதாக அவர் கூறினார்.
இந்த வைரஸ், 2021 -இல் 1,372 இந்தோனேசியத் தொழிலாளர்களின் உயிரைப் பறித்ததோடு, 2020 -இல் நால்வரைக் கொன்றதாக ஹெர்மோனோ கூறினார்.
நாட்டில் உள்ள பெரும்பாலான இந்தோனேசியத் தொழிலாளர்களிடம் ஆவணங்கள் இல்லை, இதனால் அவர்களின் உரிமைகள் மற்றும் நலனுக்கான பொறுப்பை முதலாளிகள் எடுப்பதைத் தவிர்க்கிறார்கள் என்று அவர் கூறினார்.
“அதிக ஆவணமற்ற தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் துறைகள் கட்டுமானம், சேவைகள், தோட்டங்கள் மற்றும் வீட்டுப் பணிப்பெண்கள்,” என்று அவர் கூறினார்.
மலேசியாவில் இந்தோனேசியத் தொழிலாளர்களை ஹெர்மோனோ சந்தித்தார்
கோவிட் -19 காரணமாக இறந்த பெரும்பாலான இந்தோனேசியர்கள் கட்டுமானம் மற்றும் சேவைத் துறை, துப்புரவு துறை போன்றவற்றைச் சேர்ந்தவர்கள்.
“அவர்கள் வீட்டிலேயே இறந்தாலும், அந்த நபரின் மரணத்தில் குற்றவியல் கூறு எதுவும் இல்லை என்பதைத் தீர்மானிக்க காவல்துறைக்குத் தெரிவிக்க வேண்டும்.
கடந்த வாரம், மைக்ரண்ட் கேர் மலேசியப் பிரதிநிதி அலெக்ஸ் ஓங், எண்ணெய் பனை தோட்டத் துறையில் ஆறு மாநிலங்களில் குறைந்தது 40 கோவிட்-19 திரளைகள் பதிவாகியுள்ளன என்று மலேசியாகினியிடம் கூறினார்.
300,000 -க்கும் மேற்பட்ட ஆவணமற்ற வெளிநாட்டு தொழிலாளர்கள் உள்ளனர், அவர்களின் தடுப்பூசி நிலை தெரியவில்லை மற்றும் இந்தப் பண்ணைகளில் அவர்கள் தங்குமிடம் தேடப் பயப்படுகிறார்கள்.
சிலாங்கூரின் கோவிட்-19 (SelVax) தடுப்பூசித் திட்டத்தின் முடிவில் குறைந்தது 3,500 வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்குத் தடுப்பூசி மறுக்கப்படவில்லை என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சாண்டியாகோ கூறினார்.
குறிப்பாக, சிலாங்கூரில் உள்ள பெரியத் தொழில்துறை நகர்ப்புறங்களில், தடுப்பூசி போடப்படாத சட்டவிரோதக் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருப்பதை இது காட்டுகிறது.
அனுமதியற்ற வெளிநாட்டு ஊழியர்களுக்குத் தடுப்பூசி போடுவதில் கவனம் செலுத்தாததன் விளைவுகளை மலேசியா சந்திக்க நேரிடும் என்று சார்லஸ் கூறினார்.