கோவிட்-19 (டிசம்பர் 21): 3,140 நேர்வுகள்

கோவிட்-19 | சுகாதார அமைச்சகம் இன்று 3,140 புதிய கோவிட் -19 நேர்வுகளைப் பதிவுசெய்துள்ளது, ஒட்டுமொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை 2,724,684 ஆக உள்ளது.

இன்று குணமடைந்த கோவிட்-19 நோயாளிகள், மொத்தம் 4,278.  இது செயலில் உள்ள நேர்வுகளின் எண்ணிக்கையைக் குறைக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய கோவிட்-19 நேர்வுகளின் எண்ணிக்கை இரண்டு மாத இறக்கத்தில் நிலையாக உள்ளது மற்றும் நேற்றைய நிலவரப்படி R-எண் 0.91 ஆக உள்ளது. R-எண் 1.00க்கு மேல் இருக்கும் மாநிலங்கள் எதுவும் இல்லை.

இன்றைய நிலவரப்படி, தீவிர சிகிச்சை பிரிவில் (ஐசியு) கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை  ஒரு வாரத்திற்கு முன்பு இருந்ததை விட 7.6 சதவீதம் குறைவாக உள்ளது.

இன்றுவரை, நான்கு புதியவை உட்பட 247 கோவிட்-19 திரலளைகள் (கிளஸ்டர்கள்) இன்னும் செயலில் உள்ளன.

ஒரு வாரத்திற்கு முன்பு 245 செயலில் உள்ள கிளஸ்டர்களில் இருந்து தற்போதைய கிளஸ்டர்கள் 0.8 சதவீதம் அதிகரித்துள்ளது.

புதிய நேர்வுகளின் மாநில அளவிலான விவரம் நள்ளிரவுக்குப் பிறகு மட்டுமே வெளியிடப்படும். நேற்று (டிசம்பர் 20) 2,589 புதிய நேர்வுகள் பதிவான புள்ளிவிவரங்கள் கீழே உள்ளன.

சிலாங்கூரில் நேற்று புதிய வழக்குகள் ஒப்பீட்டளவில் குறைவாக இருந்தபோதிலும் – பிப்ரவரியில் இருந்து காணப்படாத அளவில் – வார இறுதியில் மாநிலம் பாரிய வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

சிலாங்கூர் (380)

ஜோகூர் (355)

கெடா (277)

கிளந்தான் (249)

தெரெங்கானு (232)

பினாங்கு (225)

கோலாலம்பூர் (186)

பகாங் (168)

சபா (122)

பேராக் (112)

நெகிரி செம்பிலான் (108)

மலாக்கா ( 108 )

சரவாக் (36)

புத்ராஜெயா (30)

பெர்லிஸ் (20)

லாபுவான் (8)