பேராக் டிஏபி-க்கு விளக்கமளித்தார் டெரன்ஸ் நாயுடு!

வியாழன் அன்று பினாங்கில் இரவு நேரத்தில் காவலில் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து பாசிர் பெடமர் (Pasir Bedamar) சட்டமன்ற உறுப்பினர் டெரன்ஸ் நாயுடு (Terence Naidu) தனது நடத்தை குறித்து  விளக்கமளித்தார். அதோடு ஒரு போலிஸ் புகாரும் செய்துள்ளார்.

“நான் போதை பொருள் எதுவும் எடுக்கவில்லை, எனது சிறுநீரக சோதனை எப்படி ‘பொசடிவாக’ காட்டியது” என்று வினவுகிறார்.

இன்று விடுவிக்கப்பட்ட அவர், பேராக் டிஏபி தலைவர் என்கா ங்கா கோர் மிங் (Nga Kor Ming), மாநில மற்றும் தேசிய அளவிலான கட்சித் தலைமைக்கு அவர் காவலில் வைக்கப்பட்டுள்ள “உண்மையான சூழ்நிலை” குறித்து கூறியுள்ளார்.

“டிஏபி  தேர்ந்தெடுக்கப்பட்ட தனது பிரதிநிதிகளின் நடத்தை, குணம் மற்றும் நேர்மை ஆகியவற்றை தீவிரமாக எடுத்துக்கொள்கிறது என்றும்,  மக்களால் நம்பப்பட்ட அவர்கள் தங்கள் வழிகளில் முன்மாதிரியாக இருப்பார்கள்  என்றும் நான் பொதுமக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன்,” என்று ங்கா  கூறினார்.

டெரன்ஸ் பினாங்கில் உள்ள ஒரு இரவு விடுதியில் இருந்தபோது சட்டவிரோதமான போதை பொருள் சோதனையில் மாட்டிக்கொண்டார். அவர் காவலில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.

சோதனையின் போது கைது செய்யப்பட்ட 47 பேரில் 36 பேர் போதைப்பொருள் சோதனையில் பசடிவ்வாக இருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்த நபர்கள் “ஆபத்தான” மருந்துகளை உட்கொண்டதற்காக  ஆபத்தான மருந்துகள் சட்டம் 1952 இன் பிரிவு 15(1)(a) இன் கீழ் விசாரிக்கப்படுகிறார்கள்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு RM5,000 வரை அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

54 வயதான டெரன்ஸ் இரண்டு முறை பேராக் சட்டமன்ற உறுப்பினராகவும் வழக்கறிஞராகவும் உள்ளார்.