ஆட்சேபனைகளை மீறி குழந்தைக்கு தடுப்பூசி போட்ட கிளினிக்கிற்கு எதிராக வழக்கு!

பத்து குழந்தைகளின் தாயும் வழக்கறிஞருமான அசியா அப்துல் ஜலீல்(Asiah Abdul Jalil), இன்று முன்னதாக தனது 13 வயது மகனுக்கு இரண்டாவது கோவிட்-19 தடுப்பூசியை செலுத்திய பாலோக் ஹெல்த்  கிளினிக்கின் (Balok Health) மருத்துவ ஊழியர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டியுள்ளார்.

அசியா முன்பு சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் மற்றும் சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லாவின் பெயரைக் குறிப்பிட்டு ஒரு போலீஸ் புகாரையும், ஜனவரி 9 தேதியிட்ட ஒரு ஆட்சேப கடிதத்தையும் பகாங் காதார அமைச்சு அலுவலகத்தில்  பதிவு செய்திருந்தார்.

அசியா, தனது முகநூலில் பகிரப்பட்ட அவரது சட்ட நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ கடிதம் மூலம், கிளினிக் நிர்வாகி தனது ஐந்தாவது குழந்தைக்கு தடுப்பூசி செலுத்தியதற்கு  ஊழியர்களின் பெயரை வெளிப்படுத்த வேண்டும் என்று கோரினார்.

“எனது மகனுக்கு கோவிட்-19 தடுப்பூசியை செலுத்திய குவாந்தனின் பலோக் ஹெல்த் கிளினிக் ஊழியர்களுக்கு எதிராக நான் வழக்குத் தாக்கல் செய்வேன்.” என்கிறார் அவர்.

‘ஒருதலைப்பட்ச சம்மதம்’

இச்சம்பவம் குறித்து அசியா கூறுகையில், தனது கணவர், இன்று காலை 8.30 மணியளவில் தனது மகனை தனது இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்காக பாலோக் ஹெல்த்  கிளினிக்கிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

“எனது கணவரின் ஒப்புதல் ஒருதலை பட்சமானது” என்கிறார் அசியா.

19, 17, 16 மற்றும் 14 வயதுடைய ஆசியாவின் நான்கு மூத்த குழந்தைகள் கோவிட்-19 தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை முடித்துள்ளனர், மேலும் பூஸ்டருக்குத் தகுதி பெறுவார்கள், அதே நேரத்தில் அவரது ஐந்தாவது குழந்தை, 13 வயது, அவரது இரண்டாவது டோஸுக்காகக் காத்திருந்தது.

ஆசியாவின் ஆறாவது, ஏழாவது, எட்டாவது மற்றும் ஒன்பதாவது குழந்தைகள் 11, ஒன்பது, ஏழு மற்றும் ஐந்து வயதுடையவர்கள், அவரது இளைய மகனுக்கு இரண்டு வயது.

ஓமிக்ரான் மாறுபாட்டின் பரவல் குறித்த புதிய கவலைகளுக்கு மத்தியில், குழந்தைகளுக்கான எதிர்கால கோவிட்-19 தடுப்பூசிகள் குறித்த அரசாங்கத்தின் அறிவிப்பு தொடர்பாக ஜனவரி 7-இல் அவர் தனது ஆரம்ப போலீஸ் அறிக்கையை பதிவு செய்தார்.

ஜனவரி 6 அன்று, 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கான Pfizer’s Covid-19 தடுப்பூசியின் குறைந்த செறிவு கொண்ட பதிப்பிற்கு மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் (DCA) நிபந்தனைக்குட்பட்ட ஒப்புதலை வழங்கியதாக நூர் ஹிஷாம் கூறினார்.