அம்னோவின் அடிமட்ட மக்களே கட்சியின் இறுதி முடிவெடுப்பவர்கள், அவர்களின் குரலை தலைமை பின்பற்றும் என்று கட்சியின் தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி(Ahmad Zahid Hamidi) கூறினார்.
பாஸ் கட்சி தலைவர் அப்துல் ஹாடி அவாங்குடன் இணந்த புகைப்படத்தை அவர் இன்று தந்து அறிக்கையில் இணைத்திருந்தார். அதன் நோக்கம் விளக்கப்படவில்லை.
ஜாஹிட்டின் கூற்றுப்படி, கடந்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு கட்சியை பலவீனப்படுத்தும் சதிக்கு அம்னோ ஆளாகியது, ஆனால் அடிமட்ட மக்களின் ஒற்றுமையின் காரணமாக, கட்சி வெற்றி பெற்று, மறுமலர்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
“உண்மையில், அம்னோ அடிமட்ட மக்களுக்கு சொந்தமானது, அதே நேரத்தில் அதன் தலைமைதான் அறங்காவலராக உள்ளது.”
அம்னோவின் அடிமட்ட மக்கள் குறித்த ஜாஹிட்டின் அறிக்கைக்கு பிறகு, அம்னோ தலைமையின் பெரும்பான்மையானவர்கள் முவபாக்காட் நேஷனல் (Muafakat Nasional), பெரிக்கத்தான் நேசனலுடன் (Perikatan Nasional) இணைந்து பணியாற்ற விரும்புவதாக ஹாடி கூறியுள்ளார்.
“அம்னோவின் எதிரிகள் 2018 தேர்தலுக்குப் பிறகு அம்னோவைக் கலைக்க முயன்றதாக ஜாஹிட் கூறினார். அம்னோ தோல்வியடைந்த பிறகு மாற்று கட்சிக்கு இழுக்கும் முயற்சிகள் நடந்தன, அவர்கள் அம்னோவைக் கட்டுப்படுத்த முயன்றனர்.”
“அம்னோவின் அடையாளம் மிகவும் வலிமையானது, பெரும் அழுத்தங்கள் இருந்தபோதிலும் உண்மையிலிருந்து ஒருபோதும் விலகாது” என்று அவர் கூறினார்.
அம்னோ மற்றும் பெர்சதுவுடன் இணைந்த தேர்தல் உடன்படிக்கையை பாஸ் விரும்புகிறது என்று ஹாடி பலமுறை கூறியுள்ளார். கடந்த ஆண்டு மலாக்கா தேர்தலின் போது அது நடக்கவில்லை, ஜோகூரில் தேர்தல் நடந்தால் அது நடக்காது என்று அம்னோ தலைவர்கள் உறுதியாக உள்ளதாக தெரிகிறது.