ஐந்து மாநிலங்களில் 85,134 டன் வெள்ளக் குப்பைகள் அகற்றப்பட்டன

பேரிடர் பாதித்த ஆறு மாநிலங்களில் நேற்று நிலவரப்படி மொத்தம் 85,134 டன் வெள்ளக் குப்பைகளும் கழிவுகளும் அகற்றப்பட்டுள்ளன.

பகாங், மலாக்கா, நெகிரி செம்பிலான், கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் ஆகியப்  பகுதிகளை உள்ளடக்கிய துப்புரவுப் பணிகள் 98 சதவீதத்தை எட்டியதாகவும், ஜோகூர் 90 சதவீதத்தை எட்டியுள்ளதாகவும் குடியிருப்பு  மற்றும் ஊராட்சித் துறை துணை அமைச்சர் இஸ்மாயில் அப்துல் முத்தலிப்(Ismail Abd Muttalib) தெரிவித்தார்.

நேற்று மட்டும், SWCorp (SWM Environment Sdn Bhd, Alam Flora Sdn Bhd மற்றும் E-Idaman) மேற்பார்வையின் கீழ் 112 இயந்திரங்கள் மற்றும் 354 பணியாளர்களை கொண்டு  மொத்தம் 438 டன் வெள்ளக் கழிவுகள் சுத்தம் செய்யப்பட்டன.

சிலாங்கூரில் மொத்தம் 48,589 டன்களும், பகாங்கில் 34,100 டன்களும், நெகிரி செம்பிலானில் 1,400 டன்களும், கோலாலம்பூரில் 630 டன்களும், மலாக்காவில் 139 டன்களும் வெள்ளக் கழிவுகளாக  அகற்றப்பட்டன.

“இதற்கிடையில், ஜோகூரில், நேற்று வரை மொத்தம் 275.63 டன் வெள்ளக் கழிவுகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன,” என்று அவர் இன்று மூவாருக்கு அருகிலுள்ள கம்போங் பாரு லெங்கா ஜோகூரில் நடந்த வெள்ளத்திற்குப் பிந்தைய மெகா தூய்மைப்படுத்தும் நடவடிக்கையின் போது செய்தியாளர்களிடம் கூறினார்.

இஸ்மாயிலின் கூற்றுப்படி, வெள்ளத்திற்குப் பிந்தைய காலத்தில், அவரது அமைச்சு பல்வேறு மறுவாழ்வு திட்டங்களுக்காக RM117.5 மில்லியன் செலவிட்டுள்ளது.

அவற்றுள் பொது வசதிகளை புனரமைத்தல், RM50 மில்லியன் செலவில் மற்றும் சேதமடைந்த வீடுகளை சரிசெய்து புதிய வீடுகளை கட்டுவதற்கு RM50 மில்லியனை ‘அன்பான  மலேசிய குடும்ப மனைகள் முனைப்பு’ ஆகியவை அடங்கும்.

அதுமட்டுமல்லாமல், உள்ளூர் அதிகாரிகளை உள்ளடக்கிய வெள்ளக் கழிவுகளை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக RM12.5 மில்லியன் மற்றும் பேரிடர் கூடை உணவு ஊனவு  உதவிக்காக மற்றொரு RM5 மில்லியன் ஒதுக்கப்பட்டது.

மேலும், “இன்னும் பல தற்காலிக வெளியேற்ற மையங்கள் (பிபிஎஸ்) திறந்திருப்பதால், இந்த வெள்ளத்திற்குப் பிந்தைய மறுவாழ்வுத் திட்டத்திற்கான மொத்த ஒதுக்கீட்டை அதிகரிக்க அமைச்சகம் தரவுகளைச் சேகரித்து புதுப்பிக்கும்.”

“சமீபத்திய தரவுகளை சேகரித்து பெறுவதற்கான செயல்முறையானது மாவட்ட அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொதுப்பணித்துறை போன்ற பல்வேறு தரப்பினரையும் உள்ளடக்கும்” என்று அவர் கூறினார்.