கோவிட்-19 (ஜனவரி 27): 5,439 புதிய நேர்வுகள், 49 நாட்களில் அதிகபட்சம்

சுகாதார அமைச்சகம் இன்று 5,439 புதிய கோவிட் -19 நேர்வுகளைப் பதிவு செய்துள்ளது. மொத்த நேர்வுகள் 2,850,408.

இன்று பதிவான புதிய நோய்த்தொற்றுகள் டிசம்பர் 9 ஆம் தேதிக்குப் பிறகு 49 நாட்களில் அதிகபட்சமாக உள்ளன.

நாடு முழுவதும் கோவிட்-19 நோயாளிகளின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முந்தைய ஏழு நாட்களை விட கடந்த ஏழு நாட்களில் 23.26 சதவீதம் அதிகரித்துள்ளது

4,744 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ள நேற்றைய (ஜனவரி 26) மாநில வாரியான விவரம் பின்வருமாறு:

சிலாங்கூர் (1,318)

ஜொகூர் (700)

கெடா (455)

கோலாலம்பூர் (390)

கிளந்தான் (357)

சபா (335)

நெகிரி செம்பிலான் (311)

பகாங் (256)

புலாவ் பினாங் (183)

மலாக்கா(153)

பேராக் (148)

புத்ராஜெயா (38)

பெர்லிஸ் (17)

சரவாக் (13)

லாபுவான் (1)