ஊழல் தடுப்பு ஆணையம் தடுமாறுகின்றதா? –  மஸ்லி மாலிக்

முன்னாள் கல்வி அமைச்சர், மஸ்லி மாலிக் ஊழல் செய்துள்ளதாகவும், ஊழல் தடுப்பு ஆணையம் அவர் மீது விசாரணை செய்யப்போவதாக கூறியுள்ளது.

அதன் அடிப்படையில் செய்தியாளர்களுக்கு விளக்கம் அளித்த அந்த முன்னாள் கல்வி அமைச்சர் இந்த ஊழல் தடுப்பு ஆணையம் உண்மையான வகையில் விசாரணை செய்ய உள்ளதா அல்லது அது முரண்பாடான தகவல்கள் தகவல்களை முன்வைக்கின்றது என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.

இதற்கு முன்பு 50 ஆயிரம் வெள்ளி முறைகேடாக பயன்படுத்தியதாக கூறும் அவர்கள் தற்பொழுது அது இரண்டு லட்சம் என்கிறார்கள்.

“அவர்கள் நான் ஒரு வெல்ப்யர் (Velfire) என்ற வாகனத்தை பயன்படுத்தியதாக கூறுகின்றார்கள். அந்த வாகனம் என்னுடையது அல்ல அது அரசாங்க இலாகாவினுடையது”

“அந்த வாகனம் என்னுடைய பெயரில் தான் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை ஊழல் தடுப்பு ஆணையம் உறுதி செய்ய வேண்டும்”

மேலும் கூறுகையில், “நான் கல்வி அமைச்சராக இருந்த பொழுது எவ்வகையான அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்தேன் என்பதையும் அந்த ஆணையம் வெளியிட வேண்டும்” என்றார்.

இதற்கு முன்னால் பெர்சத்து கட்சியின் வழி தேர்தலில் வென்று கல்வி அமைச்சர் பதவியை வகித்தார். தற்சமயம் அவர் பிகேஆர் கட்சியில் அங்கத்தினராக உள்ளார்.