அதிகரிக்கும் அங்கத்தினர்களால் பிகேஆர் கட்சி வலிமை அடைகிறது!

மக்கள் நீதிக்கட்சியின் (பிகேஆர்) புதிய அங்கத்தினர் எண்ணிக்கை இவ்வருடம் 78,904 ஆக உள்ளது. இவ்வெண்ணிக்கை கட்சியில் வெகுசன மக்கள் ஆர்வம் கொண்டுள்ளதை காட்டுவதாக இந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் சைபுடின் நாசுத்தியொன் பத்திரிகையாளர்களுக்கு விளக்கம் அளிக்கையில் கூறினார். தற்சமயம் கட்சியில் 1,127,629 அங்கத்தினர்கள் உள்ளனர் என்கிறார்.

சுமார் 11 லட்சம் அங்கத்தினர்களை கொண்டுள்ள பிகேஆர் கட்சி பல்லின மக்களுக்கு அரசியல் வழியான வாய்ப்பை வழங்கி வருகின்றது.

இந்த கட்சியின் பொதுத்தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடக்க உள்ளது. அதன் பிறகு அதன் பொதுப்பேரவை ஜூன் மாதத்தில் நடைபெறும் என்று இந்த பொதுச் செயலாளர் தெரிவித்தார்.

மலேசியாவில் உள்ள அரசியல் கட்சிகளில் ஒரு அங்கத்தினர் ஒரு ஓட்டு என்ற விதத்தில் செயல்படும் முன்மாதிரியான கட்சியாக இக்கட்சி திகழ்கின்றது.

இதனடிப்படையில் கட்சியில் இருக்கும் ஒவ்வொரு அங்கத்தினரும் கட்சியின் தலைமைத்துவத்தில் பொறுப்பேற்கும் நபர்களை தேர்வு செய்வதற்கு வாக்களிக்க இயலும். பிற கட்சிகள் பேராளர்கள் தேர்வு செய்யும் வழி முறையை கையாழுகின்றனர்.

இதற்கு முன்பு இந்த கட்சியின் வழி தெர்தலில் நின்று நாடாளுமன்ற தொகுதிகளை வென்றவர்கள் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார்கள்.

கடந்த இரண்டு வருடங்களாக ஏற்பட்ட கட்சித்தாவலால் இவர்களில் சிலர் பிகேஆர் கட்சியை விட்டு விலகி பிற கட்சியுடன் கூட்டணி சேர்ந்து நடப்பு  அரசாங்கத்தில் பதவி வகித்து வருகின்றனர்.

ஒரு பல்லின மக்களைக் கொண்ட ஜனநாயக அடிப்படையில் திகழும் ஒரு அரசியல் கட்சியாக திகழ்ந்து வருகிறது இருப்பினும் இதன் நடைமுறை சுமூகமாக இருக்க வாய்ப்பில்லாமல், இனவாத அடிப்படையில்தான் கட்சியின் பதவிகள் மலேசியாவின் இனவாத தன்மைக்கு ஏற்ற வகையில் இருந்து வருகிறது என்கிறார் ஒரு அரசியல் ஆய்வாளர்.