பாஸ் கட்சியின் முன்னாள் பொருளாளர் சர்க்காரியா இன்று பாஸ் அங்கத்தினர்களை அதிக கேள்விகள் கேட்க வேண்டாம், அதற்கு பதிலாக பாஸ் கட்சியின் தலைமையில் உள்ள தலைவர்களை நம்புமாறு கேட்டுக்கொண்டார்.
மேலும் அடித்தள மக்களாக இருக்கும் அங்கத்தினர்கள் தலைமையில் வைத்து இருக்கும் பாஸ் கட்சியின் தலைவர்கள் மீது முழுமையான நம்பிக்கை வைக்க வேண்டும். அதை விடுத்து, அவர்களின் மீது நம்பிக்கை இல்லாத வகையில் சந்தேகம் கொண்டிருந்தாள் பாஸ் கட்சியின் தலைமைத்துவம் தரமானதாக இருக்க இயலாது என்றார்.
அவ்வாறு நம்பிக்கை வைக்கும் பொழுதுதான் நாம் அவர்களுடன் இணைந்து செயலாற்ற முடியும் அவ்வகையில் தான் பாஸ் கட்சி இயங்க இயலும். உதாரணமாக கிளந்தான் அரசாங்கம் பாஸ் கட்சியின் ஆட்சி மீது அதன் அங்கத்தினர்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் பயனாக உருவாக்கப்பட்ட ஒரு முன்னுதாரணமாகும்.
எனவே தலைமைத்துவத்தை நம்ப வேண்டும் என்று அவர் ஹரக்கா தினசரிக்கு அளித்த நேர்காணலில் கூறியிருந்தார்