அடுத்த பிரதமராக அம்னோ யாரை முன்மொழியும்?  லிம் கிட் சியாங்

அடுத்த பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி வெற்றி பெற்றால், அதன் வழி வரும் பிரதமர் அம்னோவை சார்ந்தவராகத் தான் இருப்பார்.

அந்நிலையில் தற்பொழுது இருக்கும் தலைவர்களில் யாரை அம்னோ பிரதமராக முன்மொழியும் என்ற கேள்வி எழுகிறது. அது இஸ்மாயில் சபரியாக இருக்குமா அல்லது ஊழல் நிரம்பிய நஜீப் துன் ரசாக் அவர்களாக இருக்குமா?

நஜிப் அவர்கள் மீண்டும் பிரதமராக வரக் கூடிய சூழல் இருக்குமானால் அது மலேசியாவுக்குக் கிடைக்கும் மாபெரும் அவமானம் ஆகும்.

நஜிப் பதவி துஷ்பிரயோகம், குற்றவியல் மோசடிகள் புரிந்ததற்காகக் குற்றம் சாட்டப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளார்.

நடைமுறை அரசியலைப் பார்க்கும்பொழுது நஜீப் துன் அப்துல் ரசாக் அவர்களைத்தான் பிரதமராக்கத் தயார்ப்படுத்தி வருவதாக தெரிகிறது. அண்மையில் நடந்த ஒரு அனைத்துலக மாநாட்டுக்கு நஜீப் அவர்கள் தலைமை தாங்கியுள்ளார்.

இப்படி உள்ள நடைமுறை அரசியலை ஒரு கணம் நாம் அமெரிக்கா அரசியலோடு நினைத்துப் பார்க்கலாம். அமெரிக்காவின் அதிபராக இருந்து பதவியில் விலகிய பிறகு மீண்டும் அரசியல் வருவதற்காகப் போராடி வருகிறார் டோனல்டு டிரம்ப்.. இவர் தனக்குப் பிடித்த பிரதமர்களில் நஜிப் ஒருவர் என்று கூறியுள்ளார். கடந்த ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி வெள்ளை மாளிகை மீது முற்றுகையிட்ட இனவாத குழுவினருக்குத் தூண்டுதலாக இருந்தவர் டோனால்ட் டிரம்ப் ஆகும்.

நஜீப் அவர்கள் தற்பொழுது குற்றவாளி என்று உயர் நீதிமன்றமும் மேல்முறையீட்டு நீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ளன.

இந்த தீர்ப்பை எதிர்த்து நஜிப் கூட்டரசு நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

இந்த சூழலில் அடுத்த பிரதமராக அவர் வரவேண்டிய சூழல் அம்னோவின் கையில் தான் உள்ளது. அவர் பிரதமராக மீண்டும் வந்தால் அந்த குற்றத்திலிருந்து தப்பிக்க இயலுமா?

நஜிப் அந்த குற்றங்களிலிருந்து விடுபடுவதற்காக முழுமூச்சாகச் செயல்படு அரசியல் வழி மீண்டும் பிரதமராக வாய்ப்பு இருக்குமா?

அப்படி ஒரு வாய்ப்பை உருவாக்க  நஜிப்பின் செயலாக்கம் முழுமூச்சானதாக  இருக்கும்,