ஊழலைச் சுட்டிக் காட்டியவர் மீது போலீஸ் விசாரணை

ஊழல் ஒழிப்பு ஆணையத்தின் முதன்மை கமிசனர் அசாம் பாக்கி அவர்கள்  பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் பங்குகள்  வைத்திருந்ததற்காக அவர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்ற வகையில் ஒரு அறிக்கையை லலிதா குணரட்ணம் வெளியிட்டிருந்தார்.

அதன் சார்பாக போலீசார் லலிதா அவர்களை இன்று விசாரணைக்கு அழைத்து இருந்தனர். அவர் பல்லூடக தொடர்பு சட்டம் 1998 ,பிரிவு 733 மற்றும் குற்றவியல் சட்டம் பிரிவு 505  ஆகியவற்றின் கீழ் விசாரணை செய்யப்படுவதாக அவரை பிரதிநிதிக்கும் மூத்த வழக்கறிஞர், மஞ்சிட் சிங் டில்லோன், கூறினார்

பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில், பங்குகள் வைத்ததற்காக அவர் மீது விசாரணை நடத்த வேண்டும் என்ற வகையில் ஒரு அறிக்கையை லலிதா குணரட்ணம் வெளியிட்டிருந்தார். அதன் சார்பாக போலீசார் லலிதா அவர்களை இன்று விசாரணைக்கு அழைத்து இருந்தனர்.

ஜனவரி 7ஆம் தேதி செய்யப்பட்ட ஒரு போலீஸ் புகாரின் சார்பாக இந்த விசாரணை நடப்பதாகத் தெரிய  படுகிறது. விசாரணையின்போது லலிதா அவர்களிடம் என்பத்தி மூன்று கேள்விகள் கேட்க பட்டதாக அவருடைய வழக்கறிஞர் கூறினார்.

சுமார் 3 மணி நேரம் 30 நிமிடம் நடந்த இந்த விசாரணையின் பயனாக  லலிதா அவர்கள் சோர்வடைந்து இருப்பதாக அவருடைய வழக்கறிஞர் கூறினார்.

மேலும் லலிதாவின் அறிக்கை தன்னை அவதூறு படுத்தி விட்டது என்ற வகையில் ஊழல் தடுப்பு ஆணையத்தின் அசாம் பாக்கி ஒரு அவதூறு வழக்கைப் பதிவு செய்துள்ளார். அந்த அவதூறு வழக்கில் லலிதா அவர்கள் நஷ்ட ஈடாக 10 மில்லியன் ரிங்கிட்டும் மன்னிப்பும் கேட்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

இதற்கிடையில் அரசாங்கத்தின் சார்பாக மேற்கொண்ட விசாரணையில், அசாம் பாக்கி மீது எந்த குற்றமும் இல்லை என்கிறது பங்கு பரிவர்த்தனை  கமிஷன் அறிவித்துள்ளது