பாஸ் கட்சியின் நடத்தையைச் சகிக்க முடியவில்லை என்கிறார் அம்னோ கட்சியின் தலைவர் ஜஹிட் ஹமிடி.
பாஸ் கட்சியின் தலைவர் அடிக்கடி மிருகங்களை இணைத்துப் பேசுவதால் அவர் அரசியல்வாதியாக இருப்பதைவிட விலங்கியல் நிபுணராக இருக்கலாம் என்று விமர்சித்தார் ஜஹிட்.
அன்மையில் ஹடி, அம்னோவை ஒரு நொண்டி வாத்து என்று வர்ணித்தார்.
பாஸ் கட்சி கடந்த தேர்தலில் பலம் இழந்து காணப்பட்ட அம்னோவை ஆதரித்ததின் பயனாகத்தான் அது ஆட்சியைக் கைப்பற்ற முடிந்தது. ஆதரித்தது. அப்போது அது ஒரு நொண்டி வாத்து என ஹடி சாடியிருந்தார்.
நேற்று ஜொகூர் மாநிலத்தில் தேசிய முன்னணியின் தேர்தல் இயந்திரத்தைத் துவக்கி வைத்துப் பேசுகையில் ஜஹிட் பாஸ் கட்சியை விமர்சனம் செய்தார்.
அவரின் உரை நேரிடையாக சமூக வலைத்தளங்களில் ஒளிபரப்பப்பட்டது தற்பொழுது உள்ள அரசாங்கத்தின் கீழ், பிரதமர் ஹடியை மத்திய கிழக்கு நாடுகளுக்கான சிறப்புத் தூதராக நியமித்துள்ளார்.