சீன புத்தாண்டு விடுமுறைக்காக வீட்டிற்குச் சென்ற எஸ்.பி.எம் தேர்வு சாரா மாணவர்கள் தங்கள் விடுதிகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவதில்லை, ஆனால் வீட்டு அடிப்படையிலான கற்பித்தல் மற்றும் கற்றல் (பிடிபிஆர்) மூலம் தங்கள் பாடங்களைத் தொடர்வார்கள்.
இந்த ஆண்டு (எஸ்பிஎம்) தேர்வில் பங்கேற்கும் மாணவர்களை கோவிட்-19 நோய்த்தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக இது மேற்கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சர் முகமட் ராட்ஸி ஜிடின் (Mohd Radzi Jidin) கூறினார்.
“விடுதிப் பள்ளிகளில் நிலையான இயக்க நடைமுறைகளுக்கு (எஸ்ஓபி) இணங்குவதை நாங்கள் தொடர்ந்து உறுதி செய்வோம், குறிப்பாக, கோவிட்-19 தொற்று அபாயத்தை குறைக்கவும் கல்வி அமைச்சகம் பள்ளிகளில் கண்காணிப்பை முடுக்கிவிட்டுள்ளது” என்றார்.
கல்வித் துறையில் கோவிட்-19 நேர்வுகள் அதிகரிப்பு குறித்து, ஜனவரி 1 முதல் பிப்ரவரி 1 வரை பதிவு செய்யப்பட்ட 118,238 நேர்வுகள் குறித்து அவர் கூறுகையில், 8,451 நேர்வுகள் (7.15 சதவீதம்) கல்வி குழுமங்களுடன் தொடர்புடையவை, மீதமுள்ள 109,787 (92.85 சதவீதம்) திரளலைகளுடன் சம்பந்தப்பட்டவை என்றார்.