தேசிய இருதய மருத்துவமனையில் கடந்த ஒரு மாதத்தில் மூன்று முறை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது இன்று காலை 8.40-க்கு வீடு திரும்பினார்.
கடந்த வருடம் டிசம்பர் 16-ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர் டிசம்பர் 23 ஆம் தேதி வீடு திரும்பினார். அதையடுத்து மீண்டும் ஜனவரி 7ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட அவர் ஜனவரி 13-ஆம் தேதி வீடு திரும்பினார். அடுத்தது ஜனவரி 20ஆம் தேதி மீண்டும் அனுமதிக்கப்பட்டார்.
டாக்டர் மகாதீர் முகமட் அவர்கள் தனது 97-வது வயதிலும் தொடர்ச்சியாக அரசியலில் ஈடுபட்டு வருகிறார். பெஜுவாங் எனப்படும் அரசியல் கட்சியின் தலைவராக இருக்கிறார்.