தற்பொழுது நாடாளுமன்ற விவாதத்திற்காக, கட்சி தாவல் சட்டம், சார்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது சார்பாக கருத்துரைத்த சட்டத்துறை அமைச்சர் வான் ஜுனைடி துன்கு ஜாபர், இது நாடாளுமன்ற உறுப்பினர்க மட்டுமே கட்டுப்படுத்தும், அரசியல் கட்சிகளை அல்ல என்றார்.
இந்தக் கட்சி தாவல் சட்டம் பினாங்கு மாநிலத்தில் 2012 இல் உருவாக்கப்பட்ட சட்ட அமைப்பை கொண்டுள்ளது. பினாங்கு மாநில சட்டத்தின்படி, தேர்வு செய்யப்பட்ட ஒரு சட்டமன்ற உறுப்பினர் தனது பதவியை ராஜினாமா செய்தால் அல்லது அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டால், அல்லது அவர் தனது கட்சி அங்கத்துவத்தை இழந்தால் அவர் அந்தக் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்.
இதன்படி ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் தனது கட்சியில் இருந்து ராஜினாமா செய்து விட்டு இன்னொரு கட்சியில் இணைந்தால் அவர் அந்த நாடாளுமன்ற பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். பினாங்கு மாநிலத்தில் இந்த சட்டம் 2012-இல் உருவாக்கப்பட்டிருந்தாலும் இது இன்னமும் நடைமுறைப்படுத்தப் படவில்லை.
அதற்கு காரணம் கூட்டரசு அரசமைப்புச் சட்டத்தின் கீழ் எந்த ஒரு மனிதரும் தான் விரும்பும் வகையில் கட்சிகளில் இணைவதும் விள குவதும் அவரது சுய உரிமையாகும். அரசமைப்புச் சட்டம் ஒரு தனி மனிதனுக்கு கொடுத்துள்ள அந்த சுதந்திரத்தை மாநில சட்டங்கள் வழி அகற்ற இயலாது.
அதேவேளையில் கட்சிகள் கூட்டணியாக இருக்கும் பொழுது அந்த கூட்டணியில் இருந்து வெளியாகி மற்றவொரு கூட்டணியில் இணைவது இந்த முன்மொழியப்பட்ட சட்டத்தில் அனுமதிக்கப்படும் என்கிறார் வான் ஜுனைடி.
எனவே இந்த கட்சி தாவல் சட்டம் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை மட்டும்தான் பாதிக்கும். இந்தச் சட்டம் அரசியல் கட்சிகளை பாதிக்காது. இது சார்பாக கருத்துரைத்த அரசியல் ஆய்வாளர் வோங் சின் ஹவாட், இதுபோன்ற சட்டம் போதுமானது அல்ல என்கிறார். அதற்கு காரணம் இதில் பல பலவீனங்கள் உள்ளதாகவும் அதன் அடிப்படையில் அரசியல் உரிமைகளுக்கு ஏற்ற தாக்கம் இதுபோன்ற நிலையில் கிடைக்காது என்கிறார்.
மக்கள் தேர்வு செய்யும் நபர், அவர் பின்பற்றும் அரசியல் கொள்கையில் இருந்து விலகினால், அவர் பதவி விலக வேண்டும். எப்படி பட்ட கொள்கை வேண்டும் எனபதை மக்கள் முடிவு செய்ய வேண்டும்.
தேர்வு செய்த பிறகு கூட்டு சேர்ந்து ஆட்சி செய்யும் முறையில், கொள்கை அரசியல் புறக்கணிக்கப்படும் என்கிறார் வோங்.