நேற்று கோலாலம்பூரில் இருந்து சபா, தவாவ் நகருக்குச் சென்று கொண்டிருந்த ஏர் ஏசியா விமானம் சரவாக்கின் குச்சிங் நகருக்குத் திருப்பி விடப்பட்டது.
விமானத்தின் மேல்நிலை விளக்குப் பலகைக்குள் ஊர்வன நடமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஏர் ஏசியாவின் தலைமை பாதுகாப்பு அதிகாரி கேப்டன் லியோங் டியென் லிங், இன்று ஒரு அறிக்கையில், இந்த விஷயத்தை உறுதி செய்து, எந்தவொரு விமானத்திலும் நிகழக்கூடிய மிகவும் அரிதான சம்பவம் என்று விவரித்தார்.
“கேப்டனுக்குத் தெரிந்தவுடன், விமானத்தை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குச்சிங்கிற்கு திருப்ப முடிவு செய்தார்,என்று அவர் கூறினார்”.
விமானம் தவாவுக்கு விரைவில் புறப்படும் என்று லியாங் கூறினார்.
“பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு எப்போதும் எங்கள் முன்னுரிமை. அவர்களை ஒருபோதும் ஆபத்தில் விடமாட்டோம்,”என்று கூறினார்.