ஊழலுக்கு ஆதரவான கூட்டமைப்பு பிரதமர் ஆவதற்கு தடையாக உள்ளது – அன்வார்

ஊழலுக்கு எதிரான சீர்திருத்தங்களைத் தடுத்து நிறுத்துவதற்காக, நாட்டில் சில அரசியல் கட்சிகளை பணயம் வைக்கும் நபர்கள் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார்.

“வெளிப்படையாக, நான் அனைவருடனும் நட்பாக இருக்க முடியும், ஆனால் இந்த விஷயத்தில் (ஊழல்) சமரசம் செய்வது நம் நாட்டை நாசமாக்கிவிடும்,” என்று அவர் மேலும் கூறினார்.

அதுமட்டுமல்லாமல், பண்டோரா பேப்பர் ஊழல் குறித்த அவரது விமர்சனமும் கார்ப்பரேட் பிரமுகர்களின் ஆதரவை இழக்கச் செய்தது என்கிறார்.

எனது முயற்சிகள் இன்னும் முழுமையாக பலன் தரவில்லை.

“நான் சமரசம் செய்திருந்தால், நான் ஏற்கனவே பிரதமராகியிருப்பேன் என்பதை மறந்துவிடாதீர்கள்,” என்றார்.

“பில்லியன் கணக்கான ரிங்கிட்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டன, இவர்கள் தான் இப்போது ஹீரோக்களாக இருக்க விரும்புகிறார்கள். ‘மலாய்மக்களைக் காப்பாற்ற’ என்பவர்கள்தான்  நூற்றுக்கணக்கான மில்லியன்களை நாட்டை விட்டு வெளியேற்றினர்.”

“பணம் இருப்பதால் அவர்களுக்கு ஆதரவாளர்கள் உள்ளனர். ஏனெனில் அவர்களுக்கு கார்ப்பரேட் பிரமுகர்களின் உதவி உள்ளது,” என்று கூறினார்.

பண்டோரா ஆவணங்கள்

கடந்த ஆண்டு அக்டோபரில், பண்டோரா ஆவணங்கள் கசிந்ததில் டைம் ஜைனுதீன் மற்றும் ஜி ஞானலிங்கம், ஜஃப்ருல், அம்னோ தலைவர் ஜாஹிட் ஹமிடி, துணை நிதியமைச்சர் யமானி ஹஃபீஸ் மூசா மற்றும் பிகேஆர் செலாயாங் எம்பி வில்லியம் லியோங் ஆகியோர் பெயர்கள் இடம்பெற்றதாக மலேசியாகினி தெரிவித்தது.

வெளிநாட்டு நிறுவனங்களில் பணம் வைத்திருப்பது சட்டவிரோதமானது அல்ல, ஆனால் சில சந்தர்ப்பங்களில், இந்த நடைமுறை வரி ஏய்ப்பு அல்லது வரி தவிர்ப்பு ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளது. மற்ற சந்தர்ப்பங்களில், இது பல்வேறு காரணங்களுக்காக இரகசியத்தைப் பேணுவதற்கான முயற்சியாகும்.

அந்த ஆவணங்கள் பற்றி  பலமுறை  நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார், ஆனால் தடுக்கப்பட்டார் .

இந்த விவகாரம் தொடர்பாக எம்ஏசிசி அவரை விசாரணைக்கு அழைத்துள்ளது.