‘மனைவியை இதமாக அடிக்கலாம்’ என்ற துணை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும்!

அன்மையில் மகளிர் குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை துணை அமைச்சர் சித்தி சைலா முகமட் யுசோப் பத்திரிகைக்கான ஒரு காணொளியில் கணவன்மார்கள் தங்கள் மனைவியை கண்டிக்க இதமான வகையில் அடிக்கலாம் என்ற ஆலோசனையை வழங்கியிருந்தார்.

அந்தத் துணை அமைச்சரின் காணொளியில் திருமணமான பெண்கள் எப்படி கணவன்மார்களிடம் மென்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று ஆலோசனை கூறியிருந்தார். அதோடு தன் மனைவியைக் கண்டிக்கும் போது கணவன்மார்கள் அவர்களை இதமான வகையில் அடிக்கலாம் என்றும் ஆலோசனை கூறியிருந்தார்.

இது சார்பாக கருத்துரைத்த பக்ரி நாடாளுமன்ற உறுப்பினர் இயோ பி இன்  இதுபோன்ற ஆலோசனை சொல்லும் இந்த துணை அமைச்சர் தமது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரியுள்ளார்.

எந்த கோணத்திலும் பெண்களை அடித்து கண்டிக்க வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ளக்கூடிய நடைமுறை இல்லை. இதுபோன்ற சூழலில் அதுவும் ஒரு துணை அமைச்சர் பெண்களை மென்மையாக அடித்துக் கண்டிக்கலாம் என்று ஆலோசனை கூறுவது ஏற்புடையது இல்லை என்கிறார் இந்த முன்னாள் அமைச்சர்.

இதுபோன்ற கருத்தையே பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற உறுப்பினர் நூருல் இசா அன்வார் கூறியுள்ளார். பெண்களை இதமாக அடித்து கண்டிப்பது என்பது ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று என்கிறார் அவர்.

இந்த நூற்றாண்டில் பெண்கள் பல வகையில் முன்னேற்றம் அடைந்து இருக்கும் வேளையில் அவர்களை ஆண்கள் மென்மையாக அடித்து கண்டிக்கலாம் என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய விஷயம் அல்ல. அப்படி செய்வது பெண்கள் அடைந்த நிலைமையை பின்னோக்கி தள்ளுவதற்கு ஈடாகும் என்கிறார் மரியா சின் அப்துள்ள.

இதற்கிடையில் சித்தி சைலா யூசுப் அவர்கள் தனது ஆலோசனையை வழங்கியது, எப்படி குடும்ப சூழலில் கணவனும் மனைவியும் ஒரு புரிந்துணர்வோடு வாழ வழிவகுக்கும் என்ற வகையில் தான் கூறப்பட்டது என்று தெரிகிறது.