ஜஹிட் ஹமிடி என் உதவியை நாடினர் – முஹிடின்

அம்னோ தலைவர் ஜஹிட் ஹமிடி தனது நீதிமன்ற வழக்குகளில் இருந்து விடுபடுவதற்காக என்னிடம் வந்தார் என்கிறார் முன்னாள் பிரதமர் முஹிடின்.

இது சார்பாக வெளியிட்ட அறிக்கையின்படி அந்த அம்னோ தலைவர் தான் பிரதமர் ஆன சில நாட்களிலேயே தன்னை வந்து சந்தித்ததாகக் கூறினார் முஹிடின்.

“அவர் பல கோப்புகளைக் கொண்டு வந்தார். இவை என்ன என்று நான் கேட்ட பொழுது, “இவை எனது வழக்கு சம்பந்தப்பட்டவை”, என்றார் ஜஹிட்”.

ஜஹிட், “நீங்கள்தான் எனக்கு உதவ வேண்டும் நான் எதுவும் தவறாகச் செய்யவில்லை” என்றாராம்.

மேலும் கூறுகையில் நஜிப் கூட என்னை வந்து பார்த்தார். அவர் கோபால் ஸ்ரீராம் அரசாங்கத் தரப்பு  வழக்கறிஞராக  இருப்பதில் இருந்து அவரை அகற்றும் படி கேட்டுக்கொண்டார்.

இவ்வாறு விளக்கிய முன்னாள் பிரதமர் முஹிடின்,  தன்னை இவர்கள் இப்படியெல்லாம் கேட்டுக்கொண்டபோதிலும் தான் எதிலும் தலையிட வில்லை என்று கூறினார்.

இது சார்பாக நஜிப் கருத்துரைக்கையில் தான் முஹிடினிடம் எதுவும் கேட்கவில்லை என்றும், அவர் சொல்வதை முழுமையாக மறுத்தார். இது சார்பாகத் தான் நீதிமன்றத்தில் வழக்கு போடப் போவதாகவும் கோடி காட்டினார், பல வழக்குகளில் சிக்கி இருக்கும் நஜிப்.