கோவிட் சுயபரிசோதனை கருவிகளை மதிப்பீடு செய்ய உத்தரவு

கோவிட்-19 சுய-பரிசோதனை கருவிகள் சந்தேகத்திற்குரிய முடிவுகளைக் காட்டுவதாகப் பெறப்பட்ட புகார்களைத் தொடர்ந்து, அனைத்து விநியோகத்தினர்களும் அழைக்க மருத்துவ சாதன ஆணையம் (MDA) அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் கூறினார்.

உற்பத்தியாளர்களிடம்  இருந்து, தரம் உத்தரவாத தகவலைப் பெறுமாறு, விநியோகிப்பவர்களுக்கு  அறிவுருத்த வேண்டும்  என்று, மருத்துவ சாதன ஆணையத்திடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

நேற்று புத்ரஜாயாவில் நடைபெற்ற கோவிட்-19 நிகழ்வுகள் குறித்த ஊடக மாநாட்டில் கைரி கூறினார்.

“சந்தையில், சந்தேகத்திற்குரிய சோதனைக் கருவிகள் அங்கீகரிக்கப்பட்டதிலிருந்து, இப்போது வரை தரத்தில் எந்தக் குறைவும் இல்லை என்பதைத் தீர்மானிக்க, மதிப்பீடு செய்யப்படும் என்றார். எம்.டி.ஏ.வின் தொடர் நடவடிக்கைகள் பற்றி பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும்,” என்று கைரி மேலும் கூறினார்.

சுகாதார அமைச்சிலிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், கடந்த ஆண்டு அக்டோபர் 27 ஆம் தேதி வரை, 49 கோவிட்-19 சுய-பரிசோதனை கருவிகளுக்கு MDA ஆல் நிபந்தனைக்குட்பட்ட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளன.

ஜொகூர் தேர்தல் SOP

ஜொகூர் தேர்தலுக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகள்  குறித்து, தேர்தல் ஆணையம்  விவரங்களை அறிவிக்கும் என்று கைரி கூறினார்.

பிப்ரவரி 26 ஆம் தேதி வேட்புமனுத் தாக்கல் மற்றும் மார்ச் 8 ஆம் தேதி முன்கூட்டியே வாக்களிப்பும், மார்ச் 12 ஆம் தேதி மாநிலத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளாகவும்  தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது.

AEFI தொடர்பான மரண விசாரணை

 தேசிய மருந்து ஒழுங்குமுறை முகமையின் (NPRA) இயக்குனர் டாக்டர் ரோஸ்யாதி முகமட் சானி, பூஸ்டர் தடுப்பூசிக்கு தொடர்புடைய 42 இறப்புகளில் 22 இறப்புகள் குறித்து பார்மகோவிஜிலென்ஸ் (மனித பயன்பாட்டிற்கான மருந்துகளின் இடர் மேலாண்மை குழு) விரிவான விசாரணையின் மூலம் கோவிட்-19 தடுப்பூசிக்கும் மரணத்திற்கும்  தொடர்பில்லை என்றார்.

தடுப்பூசிக்கு பிற்கு உண்டாகும் நிகழ்விகள்  (AEFI) தொடர்பான மரணத்தைத் தொடர்ந்து ஒவ்வொரு பாதகமான நிகழ்வும் மரணத்தைப் பற்றிய நிபுணர்களைக் கொண்ட குழுவால் முழுமையாக விசாரிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

“மருத்துவத் தகவல்கள் உட்பட விசாரணையின் முடிவுகள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களைக் கொண்ட மருந்தியல் கண்காணிப்புக் குழுவால், கவனமாக மதிப்பீடு செய்யப்படும், இறப்புகள் பெறப்பட்ட தடுப்பூசிகளுடன் நேரடி காரணமா என்பதை தீர்மானிக்கும்,” என்று அவர் மேலும் கூறினார்.