இந்த ஆண்டின் மறுபாதி தொடக்கத்தில் மலேசியாவின் எல்லைகளை மீண்டும் திறப்பது சாத்தியமான இலக்காக இருக்கும் என்று சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் கூறினார்.
எல்லையை மீண்டும் திறப்பதற்கான வழிகாட்டுதல்களை தயாரிக்க சுகாதார அமைச்சகத்திற்கு பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இரண்டு வார கால அவகாசம் அளித்துள்ளதாக அவர் கூறினார்.
அமைச்சரவைக்கு கொண்டு வருவதற்கு முன், வழிகாட்டுதல்களை பிரதமர் தலைமையிலான கோவிட்-19 தொற்றுநோய் மேலாண்மைக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
“ஆண்டின் மறுபாதி ஒரு யதார்த்தமான இலக்காக நான் எதிர்பார்க்கிறேன், ஆனால் இது குறித்து பிரதமர் முடிவு செய்யட்டும்” என்று இன்று பி40 -க்கான சுகாதாரத் திட்டத்தை (PeKa B40) வழங்கும் கிளினிக் குர்னியாவிற்கு வருகை தந்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
மேலும், அமெரிக்கா சுகாதார கட்டுப்பாட்டாளர்கள் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான ஃபைசரின் கோவிட்-19 தடுப்பூசியை பற்றிய மறுஆய்வு தாமதப்படுத்துவது குறித்து கருத்துரைக்கையில், அதன் இரண்டு டோஸ் திட்டமானது ஓமைக்ரான்-க்கு எதிராக நன்றாக வேலை செய்யவில்லை என்று கண்டறியப்பட்டது என்றார். இது குறித்து சுகாதார துறைக்கு ஆலோசனை வழங்கப்படுவதாகவும் கைரி கூறினார்.
எங்களிடம் இரண்டு செயல்முறைகள் உள்ளன, ஒன்று தேசிய மருந்து ஒழுங்குமுறைப் பிரிவான (NPRA) ஒழுங்குமுறை அமைப்பின் ஒப்புதல், மற்றொன்று நிபுணர் குழுவின் பார்வை.
நிபுணர் குழுக்கள் இப்போது ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான தடுப்பூசியின் தரவுகளைப் பார்த்து வருகின்றன.
பெக்கா பி40 (PeKa B40)
பெக்கா பி40 (PeKa B40) என்ற திட்டதின் கீழ், தொற்று அல்லாத நோய்களை (NCD) முன்கூட்டியே கண்டறிதல் மற்றும் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த திட்டம் B40 குழுவில் 561,990 நபர்களை பரிசோதித்துள்ளது என்றார்.
இருப்பினும், நாடு முழுவதும் (இந்தச் சேவைக்கு) தகுதியான 4.9 மில்லியன் மக்களுடன் ஒப்பிடும்போது இது இன்னும் குறைவாகவே உள்ளது. ஜொகூரில், இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் 47,448 பெறுநர்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் 12,950 பேர் NCD நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
“நாடு முழுவதும் பெக்கா பி40 திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டவர்கள் எல்லா அரசு சுகாதார கிளினிக் மற்றும் தேர்வு செய்யப்பட்ட தனியார் கிளினிக்கில் இலவச சுகாதார பரிசோதனை செய்யலாம்” என்று அவர் கூறினார்.
தொற்று அல்லாத நோய்களை (NCD) – என்பவை தடுப்பு நுரையீரல் நோய், இதய நோய், இரத்த அழுத்தம் அதிகம், மற்றும் நீரிழிவு ஆகியவை. இவற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோவிட்-19 தாக்கம் ஆபத்தாக அமைகிறது.