அனுவார் மூசா – ஜொகூர் மக்கள் தைரியமாக வாக்களிக்கலாம்

கோவிட் -19 நேர்வுகள் சமீபத்தில் அதிகரித்துள்ள போதிலும், மார்ச் 12 ஆம் தேதி நடைபெறும் ஜொகூர் மாநிலத் தேர்தலில் வாக்காளர்களாக தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற வெளியே செல்வது குறித்து மக்கள் கவலைப்படத் தேவையில்லை என்று தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் அனுவார் மூசா கூறினார்.

பிரச்சாரத்தின் போது வழங்கப்பட்ட நிலையான இயக்க நடைமுறைகளில் (SOPs) சில விட்டு கொடுக்க வேண்டி இருந்தபோதிலும், வாக்களிக்கும் செயல்முறை மற்றும் SOPகள் ஆகியவை வழி கோவிட்-19 நோய்த்தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று அவர் கூறினார்.

ஒருவர் வாக்களிக்க வெளியே செல்லும்போது ஒரு சுய சோதனையை மேற்கொள்ள நேரிடும். கோவிட்-19 நேர்மறையாக இருந்தால், குறிப்பிட்ட வாக்குச் சாவடி மையங்களுக்கு செல்ல நேரிடும்.   புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப அமைவிடங்களை வைத்துள்ளனர்.

இன்று ஜொகூர் பாருவில் உள்ள ஆர்டிஎம் ஆடிட்டோரியம் ஹாலில் நடந்த மலேசிய குடும்பம்  உரை நிகழ்த்தும் போது ‘‘அனைவரும் நன்றாகவும் கட்டுப்பாட்டுடனும் செயல்படுவார்கள்”, என்று அவர் கேள்வி பதில் அமர்வின் போது கூறினார்.

14-நாள் PRN ஜொகூர் பிரச்சார காலத்தில் நேர்முக பிரச்சாரம் மற்றும் வீடு வீடாகச் செல்வது ஆகியவை அனுமதிக்கப்பட்டன.

தேர்தல் கமிஷன் (EC) வழங்கிய SOP இன் படி, 100 பேருக்கு மிகாமல் கட்சி அலுவலகங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ கட்சி செயல்பாட்டு அறைகளில் மட்டுமே பிரச்சாரங்கள் அனுமதிக்கப்படுகின்றன.

அதே நேரத்தில் வீடு வீடாக செல்லும் பிரச்சாரங்களில், ஐவருக்கு மேல் பங்கேற்க முடியாது.

“பிரசாரமே செய்ய முடியாவிட்டால், ஜனநாயக செயல்முறை குறைபாடுடையது ஆகும்”,  என்றார்.