இன்று ஜாலான் பெந்தோங் – ரவூப் லாமா என்ற இடத்தில் பாலம் இடிந்து விழுந்ததில் சம்பவத்தில், தான் ஓட்டிச் சென்ற வாகனம் சிக்கியதை அடுத்து, செய்தித்தாள் லாரி ஓட்டுனர் ஒருவர் விபத்துக்குள்ளானார்.
அதிகாலை 3 மணியளவில் சீனக் கோவிலுக்கு முன்னால் நடந்த சம்பவம் குறித்து பொதுமக்களிடம் இருந்து காவல்துறைக்கு தகவல் கிடைத்ததாக மாவட்ட காவல்துறைத் தலைவர் காமா அசுரல் முகமட் தெரிவித்தார். சிறிய காயங்களுக்கு உள்ளான சியா கெய்ன் பாங் (30) பெந்தோங் மருத்துவமனைக்கு சிகிச்சைகாக கொண்டுசெல்லப்பட்டார்.
திங்கட்கிழமை இரவு 11.30 மணி முதல் நேற்று காலை வரை தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக பாலம் இடிந்து விழுந்ததாக அவர் மேலும் கூறினார்.
“இந்தச் சாலை தற்போது இரு திசைகளிலும் போக்குவரத்துக்கு மூடப்பட்டுள்ளது,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இதற்கிடையில், ரவுப் பொதுப்பணித் துறை, பேஸ்புக் பதிவில், மறு அறிவிப்பு வரும் வரை சாலை மூடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
சாலையைப் பயன்படுத்துவோர் அனைத்து எச்சரிக்கை அறிகுறிகளுக்கும் கீழ்ப்படிந்து, கூட்டாட்சி வழியான FT008, Bentong-Raub மற்றும் FT34 மற்றும் மத்திய நெடுஞ் சாலையைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.