காடுகளை அழிப்பதில் சட்டத்தில் ‘ஓட்டையா?’ – பிரதமரும் மாமன்னரும் தலையிடவேண்டும்

பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் மற்றும் மேன்மை தாங்கிய மாமன்னர் சுல்தான் அப்துல்லா அமாட் ஷா, பகாங்கில் உள்ள வனப்பிரச்சினையைப் பற்றிப் பேசுவார்களா என்று பெக்கா மலேசியா கேட்டுள்ளது.

பெக்கா என்ற அந்தச் சுற்று சூழல் அமைப்பின் துணைத் தலைவர் டேமியன் தானம்(Damien Thanam), மேம்பாட்டாளர்கள்  பெரிய அளவிலான வனப்பகுதி  திட்டங்களைச் செயல்படுத்த ஒரு சட்டத்தில் உள்ள ஒரு “ஓட்டையை” பயன்படுத்துகிறார்கள் என்ற கருத்தை நிராகரித்தார்.

“ஓட்டையா? நமது காடுகளை அழிப்பதை எளிதாக்குவதற்காக, அந்த காரணத்திற்காக இந்த “ஓட்டை” என்ற ஒழுங்குமுறை நடைமுறைப்படுத்தப்பட்டது என்றுதான்  நாங்கள் நம்புகிறோம்.”

மேம்படுத்துனர் தங்கள் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு (EIA) அறிக்கைகளை வெளியிடுவதைத் தவிர்ப்பதற்காக ஒரு பெரிய திட்டத்தைப் பல துண்டுகளாகப் பிரிப்பதாக டேமியன் தானம் பதிலளித்தார்.

இதை சரிபார்க்க, மலேசியாகினி 100 முதல் 500 ஹெக்டர் பரப்பளவில் நடுத்தர அளவிலான வன மேம்பாட்டு  திட்டங்களைஆராய்ந்தது

கடந்த ஆண்டு சுற்றுச்சூழல் துறையால் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களில், 18 நடுத்தர வனத் தோட்டங்கள் முதன்மையாக உள்ளன.

18 திட்டங்களில், 7 திட்டங்கள் Fajarbaru Builder Group Berhad தொடர்பானவை. இந்த நிறுவனத்தின் துணை நிறுவனங்கள் MCA தலைவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.

ஃபஜர்பாருவின் நிர்வாகத் தலைவர் முன்னாள் MCA துணைத் தலைவர் Chan Kong Choy ஆவார், அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு, போக்குவரத்து அமைச்சர் பதவி உட்பட பல அரசாங்கப் பதவிகளை வகித்தார்.

கடுமையான சுற்றுச்சூழல் பாதிப்பு

இதற்கிடையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நாடு முழுவதும் உள்ள மாநில வனத் துறைகள், அனைத்து வனத் திட்டங்களுக்கும், முழுமையான சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடுகளை (EIA) ஐப் சரி பார்க்கவும்,  மேலும் ஒப்புதல்கள் வழங்குவதற்கு முன்பு இந்த திட்டங்களின் ஆட்சேபனைகள் மீதான பொது விசாரணைகளுக்கு கட்டாயமாக்க வேண்டும் என்றும் தானேம் கூறினார்.

இந்த இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகள் பற்றிய விரிவான அறிக்கையை வனவிலங்கு திணைக்களத்திடம் இருந்து பகிரங்கப்படுத்தவும், EIA- இல் சேர்க்கவும் அவர் அழைப்பு விடுத்தார்

பெரும்பாலான மரங்கள் ஒரே நேரத்தில் வெட்டப்படுவதால் கடுமையான சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் அதே வேளையில், பெருந்தோட்டங்கள் பெருமளவிலான வன நிலங்களை உள்ளடக்கியதால், சுற்றுச்சூழல் எதிர்மறையான தாக்கத்தை உணடாக்குகின்றன.

சுற்றுச்சூழல் ஊடக தளமான மகரங்கா(Macaranga), 2007 மற்றும் 2019 க்கு இடையில், பகாங் அரசு 75,748 ஹெக்டேர் காடுகளை தோட்டங்களுக்காக அழித்ததாக மதிப்பிட்டுள்ளது, இது கிளந்தனுக்கு அடுத்த நிலையில் உள்ளது.