நேற்று இரவு 7.15 மணியளவில் கோத்தாபாருவில் உள்ள கடோக்(Kadok) அருகே கம்போங் தலாங்கில்(Kampung Talang) வெள்ளத்தில் மூழ்கி 13 வயது சிறுவன் உயிரிழந்தார்.
இடைநிலைப்பள்ளி Kubang Kiat(SMK) பயிலும் மாணவன் Mohamad Fazli Tamri கிராமத்தில் தனது நண்பர்களுடன் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, மாலை 6.20 மணிக்கு கால்வாயில் தவறி விழுந்துவிட்டதாக, கிளந்தான் துணை போலீஸ் தலைவர் Muhamad Zaki Harun தெரிவித்தார்.
அவரது நண்பர்கள் அவரைக் காப்பாற்ற முயன்றனர், ஆனால் தோல்வியுற்றனர் மற்றும் உதவிக்கு அருகிலுள்ள கிராம மக்களை அழைத்தனர்.
“தேடல் நடவடிக்கையில் பாதிக்கப்பட்டவர் விழுந்த இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் கண்டுபிடிக்க முடிந்தது”, என்று முகமது ஜாக்கி கூறினார்.
சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைகாக Raja Perempuan Zainab II மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் கூறினார்.
70 வயதான முதியவர் ஒருவர், Kuala Krai, Dabong அருகே உள்ள கம்போங் Kuala Gris என்ற இடத்தில் நேற்று முன்தினம் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.