பெட்டாலிங் ஜெயா
இந்த மாதம் முதல் அதிக ஆபத்துள்ள கோவிட்-19 நோயாளிகளுக்கான நோய் எதிர்ப்பு மருந்தை சுகாதார அமைச்சகம் அறிமுகப்படுத்த உள்ளதாக அமைச்சர் கைரி தெரிவித்தார்.
பேக்ஸ்லாவிட் என்ற வைரஸ் எதிர்ப்பு மருந்தை வாங்குவதற்காக பைசருடன் சுகாதார அமைச்சகம் ஒப்பந்தம் செய்துள்ளது. மருந்துகள் விரைவில் வந்து சேரும் என்று அவர் கூறினார்.
முதற்கட்டமாக அதிக ஆபத்துள்ள நோயாளிகளுக்கு, வரும் இரண்டு வாரங்கள் பயன்படுத்தப்படும்.
100000க்கும் மேற்பட்ட வைரஸ் எதிர்ப்பு மாத்திரைகளை சுகாதர அமைச்சகக்கம்வாங்கிவிட்டதாகவும், மாத்திரையின் செயல் திறனை பொறுத்து மேலும் மாத்திரைகளை வாங்க முடிவு செய்திருக்கிறோம்,என்று தேசிய சிறுநீரக அறக்கட்டளையின் 16 வது ஆண்டு டயாலிசிஸ் மாநாட்டைத் திறந்து வைத்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
வயதானவர்கள், நோய் எதிர்ப்புகுறைபாடுள்ளவர்கள் மற்றும் இணை நோயுற்றவர்கள் அதிக ஆபத்துள்ள நோயாளிகளில் அடங்குவார்கள் . வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் பயனுள்ளதாக இருந்தால்,சுகாதார சேவைகளின் சுமையை குறைக்க இவை பெரிதும் உதவும் என்று கைரி கூறினார்.
மெர்க்கின் மோல்னுபிராவிர்,அஸ்ட்ரா ஜெனிகா வைரஸ் எதிர்ப்பு மாத்திரை போன்ற பிற மாத்திரைகளின் திறனையும் அமைச்சகம் கவனத்தில் கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
கோவிட் -19 எண்ணிக்கைகள் அதிகரித்து வரும் நிலையில், பொது மருத்துவமனையில் அவசர சிகிச்சை படுக்கைகள் மற்றும் இறப்பு சதவீதம் இன்னும் கட்டுப்பாட்டில் தான் உள்ளது என்று கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.