இனம் சார்ந்த மலேசியாவின் புதிய பொருளாதாரக் கொள்கையில் இருந்து விலகிச் செல்லுங்கள் – மூடா வேட்பாளர்

மக்களின் தேவைகளை அடிப்படையாகக் கொண்ட உறுதியான நடவடிக்கை இருக்க வேண்டுமே தவிர இனம் சார்ந்து அல்ல, என்று தெனாங்  தொகுதிக்கான மூடாவின் வேட்பாளர் லிம் வெய் ஜியட் கூறினார்.

“துஷ்பிரயோகம் செய்யப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கையிலிருந்து நாம் விலக வேண்டிய சரியான நேரம் இதுவே.”

வசதி படைத்தவர்களாக இருந்தாலும், அனைத்து நல திட்டங்களும் ஒதுக்கீடுகளும் ஒருவரின்  இனத்திற்காக மட்டுமே அவர்களை சென்றடைவதை நான் விரும்பவில்லை.

இந்த சூழலில் ஏழைகளுக்கு அதிகாரமும்,கூடுதல் ஆதரவும் வழங்கப்பட வேண்டும் என்பது தான் நமக்கு தேவை.

பல ஆண்டுகளாக அம்னோ-பாரிசான் நேஷனல், மலேசியாவின் புதிய பொருளாதாரக் கொள்கையை தவறாக பயன்படுத்தி பணக்காரர்களின் குழந்தைகள் மாரா ஜூனியர் சயின்ஸ் கல்லூரிகளில் நுழைவதை நாம் பார்த்து கொண்டுதான் இருக்கிறோம்.

ஏழை சீனக் குடும்பத்திற்காக தள்ளுபடியில் ஒதுக்கப்பட்ட பூமிபுத்ரா வீட்டை, பணக்கார ‘டத்தோ’ என்றாலும் அதை எளிதில் வாங்கமுடிகிறது. இது எப்படி அர்த்தமுள்ளதாக இருக்க முடியும்? நான் உறுதியான நடவடிக்கைகளை வேண்டாம் என்று சொல்லவில்லை.தேவை இருப்பவர்களுக்கு சென்றடையும் விதமாக அவை அமைய வேண்டும் என்று  நினைக்கிறன்.

NEP குறித்து எந்த ஒரு கருத்தையும் மூடா வெளியிடவில்லை, அதனால் மூடாவுக்காக என்னால் பேச  முடியாது. என்னுடைய நிலைப்படை மட்டுமே நான் இங்கு பதிவு செய்கிறேன், பிற தலைமைகளும் இதே  கருத்தினை  முன் வைப்பார்கள் என நான் நம்புகிறேன் என்று லிம் கூறினார்.

“தேவைப்படுபவர்களுக்கான  திட்டங்கள் அமைய வேண்டும் என்ற என் கருத்தும் மூடாவின் தலைமைகளின் கருத்தும் சமமாக இல்லையெனில் நான் மிகவும் ஆச்சர்யப்படுவேன்“ என அந்த  மூடா இணை நிறுவனர் கூறினார்.

 

மூடாவின் ஜோகூர் அறிக்கை

ஜோகூர் தேர்தலுக்கான தனது அறிக்கையை மூடா விரைவில் வெளியிடும் என்று லிம் கூறினார்.

வேலை வாய்ப்பு இல்லாமை, அன்றாட தேவைகளின் விலைஉயர்வு  போன்றவைகளே பெரும்பாலான  மலேசியர்கள் எதிர்கொள்ளும்  பிரச்சனைகளாக உள்ளது என்று மூடா மத்திய குழு உறுப்பினர் கூறினார்.

மூடாவும் பக்காத்தான் ஹராப்பானும் தனித்தனி அறிக்கைகளைப் பற்றி விவாதித்ததா என்ற பத்திரிகையாளர்களின் கேள்விக்கு “இல்லை” என்றும், தற்போது இரு தரப்பும் தாங்கள் போட்டியிடும் இடங்களை வெல்லும் முயற்சியில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாக லிம் கூறினார்.

தேர்தலுக்குப் பிறகு, பெரும்பான்மையான கட்சிகளுடன் நாங்கள் ஆட்சி அமைத்தால்,  எங்களில் ஒரு மந்திரி பெசாரைத் அனைவரும் ஒன்று சேர்ந்து தேர்ந்தெடுப்போம்.

“நடைபெறும் அணைத்து விவாதங்கழும்,மந்திரி ப்சாருக்கான ஆதரவு மற்றும் நிபந்தனைகளாக இருக்கும். மற்ற அனைத்து விவாதங்களும் பின்பு நடைபெறும் என்று நினைப்பதாக லிம் கூறினார்.